உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது அடுத்தது என்ன நடக்குமோ என்று கடும் அதிர்ச்சியில் அங்கு வசிக்கும் மக்கள் இருந்து வருகின்றனர், இந்த சூழலில் தமிழக ஊடகங்களும் உக்ரைன் செய்தியை அதிகம் சொல்லி கொண்டு இருக்க. பல ஊடகங்கள் சொல்ல மறந்த செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
"நீட்' தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடங்கிய பிரச்னை நீர்பூத்த நெருப்பாக நிற்கிறது திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் தமிழக ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ஆனால், ஆளுநர் இதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை இந்திய அரசியல் சாசனம் தனக்கு கொடுத்த அதிகாரத்தின் படி தான் செயல்படுவதாக கூறுகிறார், அவர் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு ரகசிய கடிதம் எழுதியுள்ளாராம். அதில் மூன்று முக்கிய விஷயங்களை ரவி குறிப்பிட்டுள்ளாராம்.
இந்தக் கடிதத்தை அமித் ஷா உள்துறை இணை செயலரிடம் கொடுத்து இதை கவனியுங்கள் என சொல்லியிருப்பதாக தெரிகிறது, அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
ஆளுநர் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் விவாதிக்க உள்ளார். அதோடு தான் எழுதிய ரகசிய கடிதத்தில் உள்ள விஷயங்கள் குறித்தும் ஆளுநர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது. ரகசிய கடிதத்தில் உளவு அமைப்புகள் சம்மந்தப்பட்ட செய்தியாக இருக்கலாம் என்றும் குறிப்பாக கோவில்கள் இடிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் குறிப்பிட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் உக்ரைன் விவகாரத்தை காட்டிலும் தமிழக அரசியலை சூடாக்கி இருக்கிறது என்பது மட்டுமே நிச்சயம்.