Tamilnadu

விசிகவினர் அமைச்சர் முன்பு நின்றது ஏன் வன்னியரசு அறிவியல் பூர்வமான விளக்கம்!

Visikavinar Minister
Visikavinar Minister

விசிக கட்சியை சேர்ந்தவரும் அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான வன்னியரசு சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் வைரலான புகைப்படம் குறித்த கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளார், இந்த விளக்கம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது.


நகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களை சந்தித்து சீட் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், இதில் ஒரு சில மாவட்டங்களில் முறையான ஒதுக்கீடு வழங்காத காரணத்தால் திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இது ஒரு புறம் என்றால் கடந்த வாரம் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையின் போது தமிழக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் விசிக நிர்வாகிகளுக்கு நாற்காலி வழங்காமல் நிற்கவைத்து பேசி அனுப்பியதாக குற்றசாட்டு எழுந்தது, இதற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த சூழலில் தனியார் யூடுப் சேனலுக்கு வன்னியரசு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் விசிக நிர்வாகிகள் எழுந்து செல்லும் போது உட்கார முடியாது என்ற காரணத்தால் நின்றனர் என தெரிவித்துள்ளார் அதாவது ஒரு இடத்தில் இருந்து கிளம்ப வேண்டும் என்றால் எழுந்து தானே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார். சரிதான் தனது இடத்திற்கு வந்தவர்கள் செல்லும் போது எழுந்து நின்று வழி அனுப்புவது தானே பண்பாடு அதனை ஏன் அமைச்சர் செய்யவில்லை எனவும் தற்போது மற்றொரு தரப்பு கேள்வி எழுப்புகிறது.

ஒன்று இரண்டு சீட் வாங்க எப்படியெல்லாம் சுய மரியாதை பாடக படுகிறது என்பதை இதில் இருந்தே அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் சமூகவலைத்தள வாசிகள் வன்னியரசு கொடுத்த பதிலை கீழே வீடியோவில் பார்க்கலாம்.