தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் உண்மை கண்டறிய பாஜக சார்பில் வெளிமாநிலத்தை சேர்ந்த நான்கு பாஜக நிர்வாகிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டது, குழுவில் பிரபல நடிகையையும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி இடம்பெற்று இருந்தார்.
இந்த குழு லாவண்யா பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து விசாரணை நடத்தியது விசாரணையில் மாணவி லாவண்யா குறித்து கேட்டறிந்த அறிக்கையை பாஜக தேசிய தலைமை மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோரிடம் அந்த குழு அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், விஜயசாந்தி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய சாந்தியிடம் தொடர்ந்து ஒரே கேள்வி கேட்டு கொண்டே இருந்தார் இதற்கு வானதி பதில் கொடுக்க அருகில் இருந்த விஜயசாந்தி விடுங்க பிரதர் அவரது வேலையை செய்கிறார், நன்றாக செய்யட்டும் குட் ஒர்க் பிரதர் என குறிப்பிட்டார் அதாவது எப்படி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோபால புரம் ஊடகங்கள் என நக்கல் அடிப்பாரோ அதே பாணியில் பதிலடி கொடுத்தார் விஜயசாந்தி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்று விஜசாந்தியிடம் வாங்கி கட்டிய ரிப்போர்டர் ஏற்கனவே அண்ணாமலையிடம் பலமாக வாங்கி கட்டியவர் என்பது கூடுதல் சிறப்பு, வருகின்ற போகின்ற அனைத்து மக்களும் தமிழக ஊடகத்தை சேர்ந்த பலரை துவைத்து எடுப்பது தொடர்கதையாக மாறியுள்ளது.