Tamilnadu

அடிதூள்! ஆளுநர் காதுல சொன்ன சீக்ரெட்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அண்ணாமலை!

annamalai and rnravi
annamalai and rnravi

தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு முக்கிய விஷயங்களை ஆளுநரிடம் எடுத்து வைத்ததாக தெரிகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை...


"இன்று...எச் ராஜா,  பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி உள்ளிட்ட நாங்கள் அனைவரும் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது என்பதை விரிவாக எடுத்துரைத்தோம். இதுகுறித்து அவரிடம் மெமோரேண்டம் கொடுத்து இருக்கின்றோம். 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கரூர் முதல் கன்னியாகுமரி வரை பல ஆணவக்கொலைகள்  நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நான்கு கொலைகள் நடந்துள்ளது.மக்கள்  இதை எல்லாம் பார்த்துகிட்டு தான் இருக்காங்க. தமிழகத்தில் காவல்துறை எப்படி அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இது தவறான ஒன்று. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்து இருக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குறிப்பாக கடலூர் திமுக எம்பி மற்றும் திருநெல்வேலி எம்பி பற்றி சொல்லி ஆகவேண்டும். கொலைக் குற்றவாளியான கடலூர் எம்பி வெளியிலேயே இருந்து, தற்போது தான் கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார். இதற்காக பாஜகவினர் கடந்த 20 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதேபோல திருநெல்வேலி எம்பியும் பிஜேபி தலைவர் பாஸ்கர் அவர்களை பொதுவெளியில் தாக்கி உள்ளார். அவர் தாக்கிய போது  சிசிடிவி கேமராவில் வீடியோ   பதிவாகி  உள்ளது. அதனால் அதனையும் அடித்து பிடித்து எடுத்துக் கொண்டு செல்கிறார்.  இது சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் காவலர்கள் புகாரையும் எடுக்கவில்லை. எப்ஐஆர் உம் போடவில்லை. பின்னர் காயம்  அடைந்த பாஸ்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றால், அங்கு அனுமதிக்க கூட இல்லை.

நியாயம் கேட்க சென்ற பொன். ராதா அவர்களையும் சிறை அடைத்தனர். இத்தனை கொடுமைகளும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும். பொதுவாகவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் சொல்லமுடியாது. இதுகுறித்து ஆளுநரிடம் விரிவாக எடுத்துரைத்து உள்ளோம்.

நல்ல ஒரு பதிலுக்காக காத்திருக்கிறோம் என குறிப்பிட்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.ஆக மொத்தத்தில் விரைவில் ஏதோ ஒரு மாற்றம் வரப்போகிறது என்பது மட்டும்  உறுதி.