Tamilnadu

சிரிப்பாய் சிரிக்கும் பாஜகவினர் , ஜோதிமணி பற்றிய உண்மையை வெளியில் சொன்ன ஊர்காரர் அவரு வாங்குனது ஒரு ஓட்டு ஆனா ஜோதிமணி வாங்கியது !

jothimani and karthi
jothimani and karthi

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பாஜவை சேர்ந்தவர் ஒரு வாக்கு மட்டும்  பெற்றது  விவாதத்தை உண்டாக்கியுள்ள சூழலில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் , இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி பாஜகவிற்கு கொங்கு மண்டலம் கொடுத்த பரிசு இதுதான் என கிண்டல் செய்து இருந்தார் .


இந்நிலையில் ஜோதிமணி கிண்டல் செய்த வேட்பாளர் கார்த்தியின் ஊரை சேர்ந்த ரவி என்பவர் தெரிவித்திருக்கும் கருத்து ஜோதிமணியின் வண்டவாளம் , தண்டவாளத்தை வெளி உலகிற்கு உணர்த்தி உள்ளது ,இது குறித்து ரவி என்பவர் தெரிவித்ததாவது , ஜோதிமணியை உங்கள் அனைவருக்கும் இப் போது தெரிந்து இருக்கலாம் ஆனால் ஜோதிமணி 2014 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தது தெரியுமா அதுவும் 10,47,054  வாக்குகள் பதிவான இடத்தில் வெறும் 30,459 வாக்குகள்தான் வாங்கினார் சதவிகித அடிப்படையில் 2.91 % வாக்குகள்தான் ,4 வது இடம் பிடித்தார் .

இவருக்கு அடுத்து நோட்டா 1.32 % வாக்குகளை வாங்கியது , இப்போது பாஜக காரர் கார்த்தி ஒரு  ஓட்டு வாங்கினார் என கிண்டல் செய்கிறீர்கள்  , நீங்கள்(ஜோதிமணி ) சொந்த ஊரில் 9 ஓட்டு கூட வாங்காமல் அவமானப்பட்டது  நினைவில் இல்லையா ?  பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பெற்ற  வாக்குடன் ஒப்பிடுகையில் உங்களை காட்டிலும் அதிக வாக்கினைதான் கார்த்தி என்பவர் சுயேட்சையாக நின்று பெற்றுள்ளார் . நீங்கள் கட்சி சின்னத்தில் நின்றே கேவலமாக தோற்றீர்கள் நியாபகம் இருக்கிறதா ?

செந்தில்பாலாஜி தயவிலும் ,திமுகவினர் தயவில் வெற்றிபெற்றுவிட்டு அடுத்தவர்களை பேசும்போது நா கூசவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இனியும் நீங்கள் அடங்கவில்லை என்றால் உங்கள் கட்சியை சேர்ந்த கோபண்ணா உங்களை பற்றி நீங்கள் பெற்ற  வாக்குகள் ,அரசியலில் காலூன்ற என்ன செய்தீர்கள் என சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் சொன்னாரே.,

 அதையும் குறிப்பிட்ட வேண்டியிருக்கும் என பிரத்தியேகமாக நமக்கு வாட்சப் மூலம்  தெரிவித்துள்ளார் பெரும் மக்கள் ஆதரவில் வெற்றிபெற்றது போன்று பில்ட்டப் கொடுக்கும் ஜோதிமணியின் கடந்த கால அரசியல் வாழ்க்கை குறித்த தகவல் வெளியான நிலையில் பாஜகவினர் ட்விட்டர் பேஸ்புக் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர் .