24 special

பிரபாகரன் இறந்த சமயம் சீமான் என்ன செய்தார் தெரியுமா...? புது விடியோவுடன் ட்ரோல் செய்து ட்ரெண்ட் செய்யப்படும் சீமான் விவகாரம்...!

mk stalin, seeman
mk stalin, seeman

திமுகவின் இணைய உடன்பிறப்புகள் மற்றும் நாம் தமிழர் சீமான் தம்பிகள் இடையே நடைபெறும் பனிப்போர் மிகவும் பிரபலமானது, திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்து கொண்டு அடித்த ஊழல்கள், காங்கிரஸ் ஆதரவுடன் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் திமுக அடித்த கூத்து என அனைத்தையும் பற்றி நாம் தமிழர் கட்சியினர் பதிவிடுவதும் சீமான் என்னவாக இருந்தார் தெரியுமா? அவர் இதற்கு முன்பு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? சீமான் எப்படி எல்லாம் பேசினார்? இப்படி மாற்றி பேசுகிறார், சீமான் முன் வாழ்ந்த வாழ்கை தெரியுமா என சில பெண் விவகாரங்களை வைத்து திமுகவின் இணைய உடன்பிறப்புகள் பதிவு செய்வதும் வாடிக்கையாகி விவகாரம்...


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமி விவகாரத்தை வைத்து சீமானை ட்ரோல் செய்து கொண்டிருந்தனர் இணைய உடன்பிறப்புகள், குறிப்பாக விஜயலட்சுமி 'என்னிடம் சீமான் இருந்து கொண்ட உறவின் காரணமாக நான் கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் அபார்ஷன் செய்துள்ளேன்' என வெளிப்படையாகவே அறிவித்தார். இது மட்டுமல்லாமல் 'காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளேன், சீமானை கைது செய்ய வேண்டும் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என வேறு பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியது மட்டுமல்லாமல் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வேறு வைரலாகி கொண்டிருந்தார். 

அவருக்கு ஆதரவாக வீரலட்சுமியும் வேறு சீமானை குறிவைத்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டுக்கொண்டிருந்தார், நான் சீமானை பழிவாங்குவேன் என வீரலட்சுமி சபதம் செய்தது வேறு தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜயலக்ஷ்மியின் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சீமான் மற்றும் விஜயலட்சுமி பேசிய வீடியோக்கள் அனைத்தையும் திமுகவின் இணைய உடன்பிறப்புகள் ட்ரெண்ட் செய்து அதனை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கி வந்தனர். அதன்பிறகு விஜயலட்சுமி இந்த விவகாரத்தில் சீமான் தான் வெற்றி அடைந்து விட்டார், அவருக்கு இருக்கும் செல்வாக்கு தற்பொழுது அதிகரித்துவிட்டது நான் மீண்டும் கர்நாடகாவிற்கு செல்கிறேன் என கூறி பெங்களூர் சென்றார். சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்த விவகாரம் தற்பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

குறிப்பாக விஜயலட்சுமி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருகிறது, அதில் சீமான் ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பொழுது மிகவும் அமைதியின்றி காணப்பட்டார் எனவும் அது மட்டுமல்லாமல் பிரபாகரன் கொல்லப்பட்ட சமயத்தில் 'அண்ணன் பிரபாகரன் இறந்து விட்டார், நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை! என்னை கடைசியாக பார்க்க வேண்டும் என்றால் வா' என அழைத்தார் நானும் சென்றேன் அதன் பிறகு நடந்தது வேறு விஷயம்' என விஜயலட்சுமி ஒரு மாதிரியாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு சீமான் இறந்த சமயம் கூட உங்களுக்கு குதூகலம் கேட்கிறதா என பிரபாகரன் இறப்பை குறிப்பிட்டும் சீமானை குறிப்பிட்டும் ட்ரோல் செய்து வருகின்றனர் திமுக ஆதரவு சமூக வலைதள ஐடிக்கள், இந்த விவகாரம் தான் இன்று காலை முதலே சமூக வலைதளத்தில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நாம் தமிழர் தரப்பிலிருந்து மகளிர் உரிமை மாநாடு குறித்தும், கனிமொழி பேசியது குறித்தும் குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என காலை முதலே எக்ஸ் வலைத்தளத்தில் கமெண்டுகள் பறக்கின்றன.