தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கிய என் மண் என் மக்கள் நடைபயணம் இன்று 3வது கட்டமாக இன்று அவிநாசியில் தொடங்கியது.அண்ணாமலை பாரத பிரதமரின் 9ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே 2 கட்ட நடைபயணம் நிறைவடைந்த நிலையில் 3வது கட்ட நடைபயணம் தொடங்கும் முன் திடீரென்று டெல்லி பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் அண்ணாமலைக்கு உடல் நிலை காரணமாக நடைபயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 3வது கட்ட நடைபயணம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் கலந்த கொண்டார். மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் பாஜக மவ்வட்டை நிர்வாகிகள் மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். நடைபயணம் தொடங்கியதும் மழை தூர ஆரம்பித்தது அதனை பொருட்படுத்தாமல் நடைப்பயணத்தை மேற்கொண்டனர். பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக திருமாறன் அவர்கள் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல்க்கு "வீர வாழை" கொடுத்து வரவேற்றார்.தொடர்நது அவிநாசியில் பேசிய மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் "நன் இந்த அவிநாசி லிங்கேஸ்வர் பாதையை தொட்டு வணங்குகிறேன், தம்பி அண்ணாமலை அவர்கள் கடந்த 6 மாத காலமாக என் மண் என் மக்கள் பாதயாத்திரையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மூலை, மூடுகிற்கெல்லாம் கொண்டு சேர்த்து வருகிறார்.
திருக்குறளின் பெருமையை இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பிரதமர் மோடி திருக்குறளை பெருமை சேர்த்து வருகிறார் இந்த செயல் அனைவருக்கும் பெருமையை சேர்த்துள்ளது. தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் முறையாக இல்லை. காங்கிரஸ் காலத்தில் செங்கோலை அவர்களது வீட்டில் ஒளித்து வைத்திருந்தனர். மேலும் அவர்கள் நடந்து செல்லும் குச்சி போன்று செங்கோலை பயன்படுத்தினார்கள். அதனை அவமானப்படுத்தி வைத்திருந்தது வெட்கம் கெட்ட காங்கிரஸ். இதுபோன்று இருந்த காங்கிரஸ் ஒழிக்க வேண்டும் என்று சூளுரைத்தார். தொடர்ந்து பேசிய அவர் எங்களுடைய தலைவர்கள் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்கள் பிஜேபியில் தலைவர்கள் யாரும் வம்சாவளியில் இருந்து வரவில்லை. ஒரு சாதாரண விவசாயி மகனை தான் தலைவராக தேர்ந்தெடுத்தோம் என்று அண்ணாமலை பெருமை படுத்தினார். தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் PM -கிஸானில் பயனடைந்து இருக்கின்றனர்.
இந்த பகுதியின் பாராளுமன்ற தலைவர் ஆ.ராசா ஒரு ஒழல்வதை அவரின் சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது எல்லாம் மக்களின் பணத்தை கோலியடித்து வைத்திருக்கிறார்கள் என்று திமுகவை விமர்சித்தார். திமுக அரசு சனாதனத்திற்கு எதிராக ஒரு தாக்குதலை தொடங்கி இருக்கின்றனர். தமிழக மக்கள் அதனை ஏற்கமாட்டார். அடுத்த தேர்தலில் உதயநிதிக்கும், ராசாவுக்கும் பெரிய அடியை மக்கள் கொடுப்பார் என தெரிவித்தார். தனது நாடு தனது மக்கள் முன்னேற பாஜகவிற்கு வாக்களியுங்கள், தனது குடும்பம் மட்டும் முன்னேற வேண்டும் என்றால் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் அவர்கள் மட்டும் வளர்ச்சி அடைவார்கள் என்று விமரவித்தார். ஊழல் வேண்டும் என்றால் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் வாக்களியுங்கள், நீங்கள் ஒரு புத்திசாலி என நான் விரும்புகிறேன் நிச்சயம் நீங்கள் பாஜகவுக்கு தான் உங்ககளது ஓட்டுகளை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடு மக்கள் நினைப்பது நல் ஆட்சியை, தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயம் உங்களுக்கு நல் ஆட்சியை கொடுப்பார் என திமுகவை விமர்சித்து முடிவு பெற்றார். இந்த நடைப்பயணத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.