Tamilnadu

ஜெயிலில் செந்தில் பாலாஜியின் நிலைமை!!! இப்படி ஆயிட்டாரே!!! வெளியான புது தகவல்...

Senthil Balaji
Senthil Balaji

செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துரையின் அமைச்சராக இருந்த பொழுது அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் ஆல்கஹாலுக்கு  பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அடிப்படையில் வீடியோக்கள் இணையங்களில் வைரலானது. மேலும் இதற்கு முன்னரே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது மக்கள் மத்தியில் பணம் வாங்கி மோசடி செய்வதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது. இவ்வாறு இதுபோன்ற தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை எழுந்து வருவதை முன்வைத்து  இவரை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்த தொடங்கியது. 


இன்று வரையிலும் கூட அமலாக்கத்துறை இவர் மீது விசாரணை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் வருகிறது. மேலும் செந்தில் பாலாஜியும் பலமுறை ஜாமின் வாங்குவதற்காக எல்லா நீதிமன்றங்களிலும் முயற்சி செய்தும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. ஆனால் என் ஒவ்வொரு முறையும் காவல் விசாரணை நாட்கள் மட்டும் 10 நாட்கள் 20 நாட்கள் என அதிகரித்து கொண்டே தான் வரும்.  இதுவரை 10 முறைக்கு மேல் இவரின் ஜாமின் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதுபோன்று பலமுறை ஜாமீனுக்காக முயற்சி செய்து விட்டு அவை யாவும் கை கொடுக்காத நிலையில் தற்போது வரை சிறையில் விசாரணைக்காக இருந்து வருகிறார். வருகின்ற ஜூன் 14ம் தேதி வந்தால் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும். இந்த நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கிற்கு எதிராக ஜாமின் கிடைக்காத நிலையில் தற்போது செந்தில் பாலாஜி புதிய திட்டத்தை தீட்டியுள்ளாராம்!! அதாவது அமலாக்கத்துறை தொடுத்த வழக்கிற்கு எதிராக பிணை வழக்கு செந்தில் பாலாஜி தொடுக்க உள்ளார் என்று செய்திகள் பரவி வந்தது.

இதனைத் தொடர்ந்து பலமுறை செந்தில் பாலாஜியின் ஜாமின் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து வருகின்ற மே 18 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை என்பதால் எப்படியாவது அதற்குள் வெளியே போய் விட வேண்டும் என்று முயற்சி செய்து உள்ளனர். மேலும் வழக்கறிஞர்களும் கூட இதற்கு மேல் அமலாக்கத்துறை  விசாரணைக்காக வைத்திருப்பதற்கு எதுவும் கிடையாது கண்டிப்பாக ஜாமீன் கொடுத்து விடுவார்கள் என்று கூறி இருந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இப்போது இதை விசாரிக்க முடியாது என்று ஜூலை 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட இவர் இன்னும் இந்த வருடத்தில் ஜூன் 14ஆம் தேதி வருவதற்கு கொஞ்ச நாட்களில் இருந்து வருகிறது.

இப்படி கைது செய்யப்பட்டு ஒரு வருட காலம் ஆகப்போகும் நிலையில் ஜூலை 10ஆம் தேதி தான் வழக்கு விசாரணையே வரப்போகிறது என்று கூறும் நிலையில் ஒரு வருடத்திற்கும் மேல் தண்டனை எதுவுமே பெறாமல் வெறும் விசாரணைக்காக மட்டுமே குற்றவாளி என்ற பெயரிலேயே நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது தவிர எந்த ஒரு தண்டனையும் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு விசாரணைக்காக மட்டுமே இவ்வளவு நாட்கள் சிறையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆதாரம் இல்லாத உணவினால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதோடு மிகவும் உடல் மெலிந்த நிலையில் செந்தில் பாலாஜி இருப்பதால்  திமுக மீது செந்தில் பாலாஜியின் குடும்பத்தார் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.