24 special

டெல்லி மட்டும் தான் தெரியுமா? கனிமொழியை சுண்ட காய்ச்சிய கேள்வி?

Kanimozhi ,stalin
Kanimozhi ,stalin

வேங்கைவயல் கிராம மக்களுக்கு நடந்த கொடுமைக்கு அமைதி காத்த கனிமொழி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு  கொதித்து கருத்து தெரிவித்த சம்பவம் பட்டியலின மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மனிதர்கள் தினம் உபயோகப்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கவர்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து இதுவரை  நான்கு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு, மேலும் வழக்கு சிபிசிஐடி கையில் இருந்த போதிலும் 'எங்களையே அந்த குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்' என வேங்கைவயல் கிராம மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த விவகாரமும் வேறு பட்டியலின மக்களை திமுக அரசின் மேல் கோபம் கொள்ள செய்தது.

மேலும் வேங்கை வயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோருக்கு டெல்லி தாழ்த்தப்பட்டோர் அணையம் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஊருக்குள்ளே எங்களை சாதிப்பார்த்து வாழ விடாமல் செய்கின்றனர், நாங்கள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கூட இது போன்ற அசிங்கமான செயலை செய்து எங்களை படுத்துகின்றனர், ஆனால் எங்களுக்கு ஆறுதலாக நிற்க வேண்டிய அரசு எங்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கிறது என பட்டியலின சமுதாய மக்கள் கோபத்துடன் இருக்கும் நிலையில் டெல்லியில் நடந்த பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனைக்கு கனிமொழி அவர்கள் குரல் எழுப்பி உள்ளது மேலும் அவர்கள் கோபத்தை அதிகரித்துள்ளது.

திமுகவில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக முக்கியமான துணைச் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருப்பவர் கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் தங்கையும் கூட. இவர் எம்.பியாக இருந்தும்  வேங்கைவயல் கிராமத்தின் கொடுமை பற்றி இதுவரைக்கும் பொதுவெளியில் பேசவே இல்லை, இவ்வளவு ஏன் ஓரிரு வார்த்தைகள் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டார், தனது அண்ணன் ஆட்சி காலத்தில் வேங்கை வயலில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்ததை நாடாளுமன்றத்திலும் பேசவில்லை, இதற்கான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் கூட தாமதம் நடப்பதை எங்கேயும் அவர் சுட்டிக்காட்ட கூட இல்லை, கேள்வியையும் கேட்கவில்லை! 

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இதுகுறித்து பேசவும் இல்லை,  இவ்வளவு ஏன் அந்த கிராமத்துக்கு சென்ற அந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறி அவர்களை தேற்றவில்லை! இப்படி எதுவுமே செய்யாத கனிமொழி டெல்லி பல்கலைக்கழக  மாணவர்கள் விவகாரத்தில் கொந்தளித்து கேள்வி எழுப்பியது ஏன் என மக்களை மேலும் கொதிப்படையை செய்துள்ளது. 

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்களை தாக்கிய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத்தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக  மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' ளனக்கூறியது மட்டுமல்லாமல் 'தமிழக மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துவதாக வேறு  கனிமொழி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு கருத்து ஏதுவும் கூறாமல் மௌனமாக இருந்துவிட்டு  தமிழகம் தாண்டி வெளியில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பெரிதாக குரல் எழுப்பி என்ன பயன் என பட்டியலின மக்கள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர்.