தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருபவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி!! பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது என்னவோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் தான்!! இந்த சரவணன் மீனாட்சி என்னும் தொலைக்காட்சி சீரியலில் ஹீரோயின் கேரக்டரில் சூப்பராக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்தார். அதன் பிறகு தொடர்ந்து சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த இவருக்கு பிக் பாஸில் கண்டர்ஸ்டாண்டாக பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸ் சீசன் 6 ல் பங்கேற்று தன்னால் முடிந்த பெஸ்ட்டை கொடுத்து வந்தார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் 91 வது நாள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இவர் பிறந்த ஊர் பெங்களூர் என்பதால் அங்கேயே முதலில் தொலைக்காட்சியை நிகழ்ச்சி மற்றும் தொடர்கள் போன்றவற்றிலும், கன்னட மொழிகளில் கனி, பாரிஜாதா, ரங்கநாயகா என்று பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவரு முதலில் கன்னட மொழிகளில் மட்டும் நடித்து வந்த இவர் கடந்து 2015 ஆம் ஆண்டு உப்பு கருவாடு என்னும் தமிழ் திரைப்படத்தில் முதல் முதலில் நடிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். குறித்து விரிவாக காணலாம்!! நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது ஜே எஸ் கே சதீஷ் இயக்கி வரும் ஃபயர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் விரைவில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த பிக் பாஸ் பாலா இத்திரைப்படத்தில் இருந்து விலகியதாகவும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் கூறி சற்று நாட்களுக்கு முன்பாக போஸ்ட் வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ரக்ஷிதாவும் அந்தப் போஸ்டினை ரீ போஸ்ட் செய்து நான் இந்த இடத்திலிருந்து எப்பயோ வெளியே வந்து விட்டேன் நீங்கள் கொஞ்சம் தாமதமாகி விட்டீர்கள் என்று கூறியதோடு எனக்கு துணைக்கு ஒருவர் வந்து விட்டார் என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் இந்த பதிவில் தயாரிப்பாளரை மென்ஷன் செய்து தயாரிப்பாளராக இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள்!! தன்வினை தன்னைச் சுடும் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் ஃபயர் திரைப்படத்தில் ரக்ஷிதா நடித்த நிலையில் சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து அந்த வீடியோவில் ரக்ஷிதா கிளாமராக இருந்ததாகவும் தற்பொழுது இத்திரைப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டு வரும் நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் சதீஷ் தனது இணையதள பக்கத்தில் ரக்ஷிதாவை நோக்கி நீங்கள் நடித்ததே தான் நாங்கள் உங்கள் பிறந்தநாள் என்று வெளியிட்டோம்!! நீங்கள் நடிக்காததை கிராபிக்ஸ் ஆக செய்து ஒன்றும் பதிவிடவில்லை. சம்பளம் வாங்கிவிட்டு தான் நடித்தீர்கள் ஒன்றும் இலவசமாக நடித்துக் கொடுக்கவில்லை!! திரைப்படத்திற்காக நீங்கள் போட்ட அக்ரீமெண்ட் மற்றும் ஆதாரங்கள் என் கையில் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் நீங்கள் நடித்து அனைத்தையுமே என்னால் வெளியிட முடியும் என்றும், மதுரை வினையும் பிக் பாஸ் வினையும் தன்னைச் சுடும் என்று இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார்.