24 special

இன்றோடு முடிந்தது செந்தில் பாலாஜியின் ஆட்டம்

Senthil balaji
Senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானவரித்துறையினரின் அதிரடி ரெய்டுக்கு முக்கிய காரணமாகவும் தேசிய அளவில் பேசும் பொருளாகவும் மாறியது டாஸ்மாக்.  அதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் பத்து ரூபாய் பாலாஜி என்று  ஹேஸ்டாக் ட்ரெண்ட் செய்த மதுபிரியர்களே. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த மாதம் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு செய்தியாளர் ‘அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மார்க் மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுகிறது இதைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்’ அதனை தொடர்ந்து இப்படி அதிகமாக வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் கரூர் கம்பெனிக்கு செல்கிறது என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி கோபமாக, 'எந்த கடையில அப்படி அதிகமா பணம் வாங்குறாங்க என்கிட்ட அதை காமிங்க நானும் உங்க கூட வரேன் நாம போய் பார்க்கலாம்' என்று ஆவேசமாக பதில் அளித்தார். 


அமைச்சர் செந்தில் பாலாஜியின்  இந்த பதிலுக்கு பிறகு மது பிரியர்கள் ஆவேசமாகி அதில் சிலர் தனித்தனியாக மது பாட்டில்களை வாங்கும் பொழுது பத்து ரூபாய் அதிகமாக வைத்திருக்கப்படுவதை வீடியோவாக ஆதாரமாக எடுத்து, அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஹேஷ்டேக் பத்து ரூபா பாலாஜி என ட்ரெண்ட் செய்து வந்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் அடுத்ததாக, அடுத்த இரண்டு தினங்களில் துவங்கிய வருமானவரித்துறை சோதனை எட்டு நாட்கள் வரையும் நீடித்து எட்டாவது நாளான ஜூன் இரண்டாம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தமிழகம் எங்கும் சில டாஸ்மாக் கடைகளில் ஆங்காங்கே எம்ஆர்பி ரேட்டுக்கு மதுபானங்கள் விற்கப்படும் என்று திடீர் திடீர் போர்டுகள் முளைத்துள்ளன. மேலும் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களும் நாங்கள் பாட்டிலின் விலைக்கு விற்கிறோம் கூடுதலாக எந்த ஒரு தொகையும் வாங்கப்படுவதில்லை எனவும் கூறுவதாக சொல்லப்படுகிறது. 

அதாவது குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், குடி  நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று போர்டுகள்  இருப்பதை பார்த்திருப்போம், ஆனால் முதல்முறையாக தமிழகத்தில் எங்கும் நடைபெறாத வகையில் மதுபானங்கள் எம் ஆர் பி ரேட்க்கே விற்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பது மக்களிடையில் அதிர்ச்சியையும், மது பிரியர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கரூர் கேங் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டாஸ்மார்க் சேர்ந்த 9 தொழிற்சங்கங்கள் புகார் கொடுத்துள்ளனர். சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளரும் சிஐடியு, ஏ ஐ டி யு சி, அண்ணா தொழிற்சங்கம் போன்ற ஒன்பது சங்கங்கள் மத்திய சென்னை மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரூர் கேங் என்ற பெயரில் மனோகர், சம்பத் மற்றும் ஷியாம் போன்றோரே டாஸ்மார்க் மது கடைகளில் நடைபெறும் விற்பனைக்கு ஏற்ற போர் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வற்புறுத்தியதாலே மது கடைகளில் அதிக ரூபாய் வைத்து விற்கப்பட்டதாகவும் அவர்கள் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். இப்படி ஒரு ரெய்டு ஒட்டுமொத்த டாஸ்மார்க் நிர்வாகத்தையே மாற்றி உள்ளது என்பது மது பிரியர்கள் மத்தியில் சந்தோஷத்தை கொடுத்து வருகிறது. இந்த ஒரு ரெய்டால் நமக்கு நல்லது கிடைச்சிடுச்சுறுக்கு என ஒட்டுமொத்த மது பிரியர்களும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.