Tamilnadu

அதிகாரிகளுக்கு ரூ.4500 அனுப்பி வைத்த ஷாருக்கான்! எதற்கு தெரியுமா?

aryankhan
aryankhan

சென்றவாரம் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் போதை பொருள் பயன்படுத்தியதற்காக கைதுசெய்யப்பட்டார்.  இதன் காரணமாக அவருடைய குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். தற்போது சிறையில் உள்ள ஆரியன் கானிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஷாருக்கானின் குடும்பத்தினர் மிகுந்த வேதனைகள் இருக்கின்றனர்.


ஆரியன் கானின் தாயார் கௌரி எந்த ஒரு இனிப்பும் எடுத்துக்கொள்ளாமல் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நவராத்திரி விரதம் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலைமையில் ஆரியனின் ஜாமீனுக்காக தொடர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக மற்ற நடிகர் நடிகைகள் என வீட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சல்மான்கான் ஷாருக்கான் வீட்டிற்கு அருகாமையில் இருப்பதால் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆறுதல் தெரிவிக்க  தொடர்ந்து யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டு  உள்ளனர். ஆரியன் காணின் வழக்கைப் பொறுத்தவரையில் 2002 ஆம் ஆண்டு சல்மான் கான் கார் ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் வாதாடிய அமித் தேசாய் தான் வாதாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ஆரியனுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. தற்போது மும்பை அர்த்தூர் ரோடு ஜெயிலில் ஆரியன்  அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி ஷாருக்கான் ரூ. 4500 ஐ ஜெயில் அதிகாரிகளுக்கு அனுப்பி, ஆர்யனுக்கு தேவையான உணவை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஜெயிலில் உள்ள அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் பார்த்து வருகின்றனர். போதைப்பொருள் வழக்கு குற்றவாளிகள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற கைதிகளிடமிருந்து தனித்தனியாக ஒரு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.