யூடுப்பர் சிலரை சந்தித்து கடும் சிக்கலில் சிக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின், ஆ பாச வார்த்தைகளை பேசக்கூடிய சேனல் நடத்தக்கூடிய பிலிப் பிலிப் என்ற சேனலை சேர்ந்தவர்களை தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது குப்பையான நிகழ்வு எனவும் தாலிபான்கள் கூட பணம் கொடுத்தால் சந்திப்பாரா ஸ்டாலின் மிகவும் மோசமான நிலை இது என கண்டனம் தெரிவித்து இருந்தார் நடிகை கஸ்தூரி.
இந்த சூழலில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது, தமிழக முதல்வரை சந்தித்த செந்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேத வெறி இந்தியா என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார், இது பெரியாரிஸ்ட் பொழிலன் என்பவர் எழுதியது இந்த புத்தகத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்ததுடன் இந்த புத்தகத்தை எழுதிய பொழிலன் மீது
இந்தியக் குற்ற இயல் சட்டப் பிரிவு 153 (கலகத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டுதல்), பிரிவு 153 A (a) (b) (சமயம், இனம், பிறந்த இடம், குடியிருப்பிடம், மொழி முதலியவை காரணமாக வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் பகைமை / வெறுப்பு வளர்த்தல், ஒற்றுமை இன்மையைத் தோற்றுவித்தல்),
பிரிவு 505 (a) (b) (c) பொதுமக்களுக்கு அச்சம் / பீதியை விளைவிப்பதன் மூலம், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டப் படலாம் என்ற பயம் அல்லது பீதியை விளைவித்தல் மற்றும் ஒரு பிரிவு அல்லது வகுப்பு அல்லது சமூகம் ஆகியவற்றைச் சார்ந்தவர்களை வேறு பிரிவு அல்லது சமூகத்திற்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டும் உள்நோக்கத்துடன் உரை/பேச்சு/அறிக்கை என எதையும் வெளியிடுதல் அல்லது பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையான வழக்கு பதிவு செய்தது இந்த அளவிற்கு அந்த
புத்தகத்தில் கட்டு கதைகளும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டது.இந்த சூழலில் முதல்வரிடம் செந்தில் கொடுத்த புத்தகம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் எழுத்தாளர் சுந்தர்ராஜசோழன், இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- இந்த புத்தகத்தை அதிமுக அரசு தடை செய்தது..இன்னும் தமிழக அரசின் தடை இந்த புத்தகத்தின் மீதிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அடுத்தது,இதன் எழுத்தாளர் பொழிலன் தேர்தல் அரசியலை எதிர்ப்பவர். திமுகவின் 'திராவிடம்', நாம் தமிழரின் 'தமிழ் தேசியம்' என எல்லாவற்றையுமே போலித்தனம் என்பவர்..காரணம் இந்திய தேசியத்திற்கு உட்பட்டு முதல்வராகும் எந்த தத்துவத்தையும் ஏற்கக்கூடாது..தனிநாடு ஒன்றே தீர்வு என பேசும் மிஷனரி தேசியவாதிகள்.இப்படிப்பட்டவர்களின் பார்வையிலிருந்து வெளிவந்த இந்த நூலின் அட்டைப் படத்தில்,இந்திய வரைபடமே வேள்வியில் இருந்து எழுவது போல காட்டப்பட்டுள்ளது,
இந்தியா என்கிற நாடும்,அதன் சட்டதிட்டங்களும் வேதவெறி என்பதுதான் இதனுடைய உள்ளர்த்தம்..வேதத்தின் மீதும்,இந்து மதத்தின் மீதும்,பிராமணர் மீதும் கட்டமைக்கப்படுகிற எதிர்ப்பானது இந்திய அரசியல் சாசனத்தின் மீது கேள்வி எழுப்புவதுதான்..ஆனால்,தடைசெய்யப்பட்ட இந்த புத்தகத்தை,அரசியல் சாசனத்தின் வழியிலே ஆட்சி நடத்தும் முதல்வரிடம் பரிசாக தரலாமா? அதை அவர் பெறலாமா? நாளை "நான் ஏன் கிருஸ்த்தவனல்ல?" "The Satanic Verses" போன்ற புத்தகங்களை பரிசாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதும் சரியென ஏற்றுக்கொள்ளப்படுமா?
எனவே,முதல்வரை தவறாக வழிநடத்த நினைப்பவர்களை அவர் தள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் சுந்தர ராஜசோழன் புத்தகம் மீதான தடை நீக்கப்பட்டு இருந்தால் அதனை கொடுப்பதும் பெறுவதும் தனிமனித உரிமை, ஆனால் தடை தொடர்ந்தால் அந்த புத்தகத்தை கொடுப்பதும், பெறுவதும் சட்டப்படி குற்றம் அதிலும் முதல்வர் என்ற ஆட்சி அதிகாரத்தை இருப்பவர் தமிழக அரசால் தடை செய்யபட்ட புத்தகத்தை பெறுவது பெரும் சட்ட சிக்களுக்கு வழிவகுக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
(புத்தகம் மீதான தடை நீக்கப்பட்டதா என்பதை அறிய புத்தகங்களை விற்பனை செய்யும் மெரினா புக் நிலையத்திற்கும் பெரியார் புக் நிலையத்திற்கும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட தொடர்பு எண்ணில் TNNEWS24 சார்பாக தொடர்பு கொண்டோம் அதற்கு பெரியார் புத்தகம் சார்பில் தொலைபேசியை எடுத்த நபர், புத்தகம் தங்களிடம் ஸ்டாக் இருக்கிறது, ஆனால் புத்தகம் தடை நீக்கபட்டுள்ளதா என்பது குறித்து தங்களுக்கு தெரியாது தாங்கள் வெறும் அட்மின் மட்டுமே என விளக்கம் கொடுத்தார் அங்கு பணியில் இருக்கும் ஆண் ஒருவர்.)