'ஆஸ்கர்' அகாடமியில், நடிகர் சூர்யா உள்ளிட்ட, 397 பேர் புதிய உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது அந்த அகடாமியில் உறுப்பினர்களாக உள்ள இருவர் ஸ்பான்சர் செய்தால் புதிய உறுப்பினர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் அகாடமி, ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகையர் உள்ளிட்டோரை தேர்வு செய்து விருது வழங்குகிறது.இந்த அமைப்பு, அமெரிக்கா நீங்கலாக, 53 நாடுகளில், திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சேவையாற்றி வரும் 397 கலைஞர்களை, ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளது. ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சூர்யா, ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வான முதல் தமிழ் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் பணம் இருந்தால் அதில் உறுப்பினராக ஸ்பான்சர் செய்தால் இடம்பெறலாம் என்ற தகவல் இப்போது இணையத்தில் விவாதத்தை உண்டாக்கி இருக்கிறது.
ஏற்கனவே ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றதாக தகவல் வெளியான நிலையில், அப்போதும் பணம் கட்டியே படத்தை பரிந்துரைக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. ஆஸ்கருக்கு தேர்வு ஆணவர்கள் நேரடியாக இதுபோன்று ஸ்பான்சர் இல்லாமல் ஆஸ்கர் தேர்வு குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாக இப்போது பலரும் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆமாம் சூர்யா சார் இப்படி ஆஸ்கர் ஆஸ்கர் என பணத்தை செலவு செய்வதற்கு பதில் எத்தனை மருத்துவமனை கட்டி இருக்கலாம் என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சூர்யா ரசிகர்கள் இதற்கு பதில் அளித்தாலும் எப்படி இருந்தாலும் பணத்தை கட்டிதானே ஆஸ்கார் குழுவிற்கு முதலில் உங்கள் படத்தை அனுப்பினீர்கள் இப்போது மட்டும் என்ன என்று நக்கலாக மீம்ஸ் போட்டு வருகின்றனர் எதிர் தரப்பு..!
மொத்தத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படத்தை காசு கட்டி ஆஸ்காருக்கு அனுப்பியதன் மூலமே சூர்யா ஆஸ்கார் தேர்வு குழுவில் இடம்பெற காரணமாக அமைந்து இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரியவந்துள்ளது.