24 special

இளம் தலைமுறைகளின் முக்கிய பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு!! இருந்தாலும் இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு!!

HAIR
HAIR

தற்போது நாம் வாழ்ந்து வருகின்ற காலத்தை கலியுகம் என்றும் இன்டர்நெட் உலகம் என்றும் வேகமான உலகம் என்றும் அழைக்கிறோம் இதில் சினிமா உலகம் என்ற பெயரையும் தற்போது இணைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சினிமா திரை பிரபலங்கள் என்னென்ன செய்கிறார்கள் என்னென்ன உடை அணிகிறார்கள் என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனித்து அதனையே பின்பற்றி அவர்களைப் போன்றே வாழ வேண்டும் என்ற ஒரு பிம்பம் தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. குறிப்பாக வளர்ந்துள்ள இன்டர்நெட் மூலம் ஒருவர் செய்யும் செயலானது சமூக வலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பார்க்கும் படி பதிவிடப்படுகிறது. அதனால் அவர்களைப் போன்றே நாமும் அதை செய்ய வேண்டும் என்ற ஒரு விருப்பத்தில் பலர் அதனை முயற்சிக்கிறார்கள்.


அந்த வகையில் தற்போது நடத்தப்படும் திருமணங்கள், விசேஷங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்துமே மிகவும் ஆடம்பரமாக செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணத்திற்கு முன்பு பின்பு எடுக்கப்படும் புகைப்படங்களின் தொகுப்பானது திருமணங்களின் முக்கிய செலவுகளில் அதிக பங்கை கொண்டுள்ளது மேலும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு என்றே தனி தொகை செலவிடப்படுகிறது. திருமணத்திற்கு மட்டும்தான் ஹேர் ஸ்டைலில் வைத்துக்கொள்வார்களா? நாங்களும் மேற்கொள்வோம் என தற்போது கல்லூரிக்கு செல்லும் பல இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் புது ஹேர் ஸ்டைலை வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் ஒரு நடிகர் அல்லது நடிகையை குறிப்பிட்டு இந்த ஹேர் ஸ்டைல் தான் வேண்டும் என்று செய்து கொள்கிறார்கள். அந்த ஹேர் ஸ்டைல் அனைத்தையும் பார்க்கும் பொழுது இதெல்லாம் ஒரு ஹேர் ஸ்டைலா என்று தோன்றும் அளவிற்கு உள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு புது ஹேர் ஸ்டைலை முயற்சிக்கும் முன்பு வீடியோ எடுத்து முயற்சித்த பிறகு எவ்வளவு அழகாக தனக்கு இருக்கிறது என்பதையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். அப்படி புதிய வகை ஹேர் ஸ்டைலை முயற்சிக்கும் இளம் தலைமுறை என பல கலரிங் ஹேர் ஸ்டைலையும் முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி பல நேரங்களில் அவர்களது முடி உதிர்விற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.மேலும்  முடி உதிர்வதோடு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு கலரிங் முக்கிய காரணமாக உள்ளதாக பல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி இளம் தலைமுறையினர் தான் சம்பாதிக்கும் பெரும் தொகையை மாத மாதம் புதிய புதிய ஹேர் ஸ்டைலை முயற்சிக்க செலவிடுகிறார்கள். அதற்குப் பிறகு தனது முடி கொட்டி விட்டது, முடி நரைத்துவிட்டது, வழுக்கை ஆகிவிட்டது என பல மருத்துவர்கள் நாடி செல்கிறார்கள் அதற்கென்று பிரத்தியேகமாக பல சிகிச்சைகளையும், அதிக செலவையும் செலவழித்து இழந்த கூந்தலை மீண்டும் பெறுவதற்கு அலைந்து திரிகிறார்கள். .

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் முடி உதிர்வை கட்டுப்படுத்தி மூன்று மாதத்தில் எந்தவித கெமிக்கலும் இல்லாமல் முடியை வளர வைக்கலாம் என்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது முன்பு முயலின் ரத்தத்தை துணியில் ஊற வைத்து முயல் ரத்தம் ஊறிய துணியை தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் சேர்த்து அதனை பயன்படுத்தி வந்தால் முடி நன்கு வளரும் என்பது கிராமங்களில் அதிகமாக கூறப்படும் ஒரு தகவல். தற்போது அதனையே பின்பற்றி இன்னும் பல மூலிகைகளை சேர்த்து முடியின் வேர்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் ஒரு எண்ணையை தயாரித்து அதனை வாரத்தில் இரண்டு முறை தேய்த்து தலைக்கு குளித்து வந்தால் மூன்றே மாதத்தில் வழுக்கையாக வந்தவர்களுக்கு கூட முடி நன்கு வளர்ந்துள்ளது என்று அந்த வீடியோவில் கூறியுள்ளனர். அதேசமயத்தில் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்