24 special

பந்தவாக பேசிய செந்தில் பாலாஜியை நம்பி ஏமாந்து போன முதல்வர் ஸ்டாலின்...!

senthilbalaji , mkstalin
senthilbalaji , mkstalin

பத்தாயிரம் மாற்று கட்சியினரை சேர்க்கிறோம் என கூறிவிட்டு 4000 பேரை சேர்க்கவே திமுக திணறியதும், அந்த 4000 பேரை சேர்க்க கோவையில் செந்தில் பாலாஜி விழி பிதுங்கியதும் திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வருகை புரிந்த பொழுது மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி என சின்னியம்பாளையத்தில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த நிகழ்ச்சியை அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் ஒருங்கிணைத்தார்.


மாற்று கட்சியினர் பத்தாயிரம் பேரை சேர்ப்பதற்குள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்துள்ளனர் கோவை பகுதி உடன்பிறப்புகள். இந்த நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலினை அழைத்து பெரிய விழாவாக நடத்த கோடிகளை செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மூவாயிரம் பேரை திமுகவில் இணைத்து விடலாம் என்று தான் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள் உடன்பிறப்புகள், கடைசி நேரத்தில் 3000 பேர் இணைத்தால் நன்றாக இருக்காது முதல்வர் வருகிறார் குறைந்தபட்சம் 10,000 பேராக இணைக்க வேண்டும் அப்போதுதான் முதல்வருக்கு ஒரு மரியாதை இருக்கும், ஒரு கெத்து இருக்கும் என செந்தில் பாலாஜி தரப்பில் யோசிக்கப்பட்டு விழாவில் பத்தாயிரம் பேரை இணைப்பதாக ஏற்பாடு  மாற்றப்பட்டது.

அதன் காரணமாக நிகழ்ச்சி நடந்த மேடையிலேயே பத்தாயிரம் பேர் மாற்றுக்கட்சியில் இருந்து இணைவார்கள் என மேடையில் எழுதி பேனர் வைக்கப்பட்டது, அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது ட்விட்டர் பதிவில் பத்தாயிரம் பேர் தான் இணையப் போகிறார்கள் என பந்தாவாக கூறி வந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு கோலாகலமாக நடந்தது.

ஆனால் திமுக எதிர்பார்த்ததற்கு மாறாக நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் காலி நாற்காலிகள் அதிகம் காணப்பட்டது. மொத்தமாக சேர்த்து பத்தாயிரம் பேர் இணைய வருவார்கள், அதுமட்டுமில்லாமல் மேற்கொண்டு ஆட்கள் நிகழ்ச்சியை பார்க்க வருவார்கள் என திமுக தரப்பில் கூறிவந்த நிலையில் 5000 பேர் வருவதற்கே திணறிவிட்டது. 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஐயையோ முதல்வர் வந்துவிடப் போகிறார் என்ன நாம் செய்வது என புலம்பி தவித்துள்ளனர். முதல்வர் வருவதற்குள் காலி இருக்கைகளில் ஆட்களை நிரப்பி விடவேண்டும் என பக்கத்தில் உள்ள பகுதியில் எல்லாம் ஆட்கள் ஏற்பாடு செய்து வரவழைக்க ஓடினார்கள். ஆனால் மக்கள் மத்தியில் திமுக விழாவா ஆளை விடுங்கப்பா என கூறியதால் ஆட்களை வரவழைக்க திண்டாடி விட்டார்கள். திமுக விழாவிற்கு நாங்கள் வர தயாராக இல்லை என பலர் கூறிய மறுத்த காரணத்தினால் வேறு வழி இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக அங்கிருந்த காலி பிளாஸ்டிக் நாற்காலிகள் தூக்கி ஓரமாக வைத்து விட்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.  

காலி நாற்காலிகள் இருந்தால் முதல்வர் பார்த்தால் டென்ஷன் ஆகிவிடுவார் என்பதற்காக அவசர அவசரமாக காலி நாற்காலிகள் அப்புறப்படுத்தப்பட்டது. இப்படி பத்தாயிரம் பேர் திமுகவில் இணைவார்கள் என ஜம்பமாக விளம்பரம் செய்துவிட்டு இறுதியில் 4000 பேரை சேர்ப்பதற்கே திமுக தலைகீழ் நின்று தண்ணி குடித்தது.முதல்வர் ஸ்டாலினும் வேறு வழியில்லாமல் தன்னுடைய உரையில் 4000'க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைகிறார்கள் என்று மாற்றி குறிப்பிடும் சூழல் உண்டானது,

இன்னொரு முக்கிய விஷயமாக திமுகவின் நிகழ்ச்சி என்றால் தற்பொழுது உதயநிதியின் படங்கள் எல்லாம் இல்லாமல் இருக்காது, ஆனால் இந்த மாற்று கட்சியினர் இணையும் இந்த நிகழ்ச்சியில் உதயநிதியின் படத்தை பெரிய அளவில் போடவும் இல்லை இதுவும் ஒரு பக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமில்லாமல் கோவை மண்டலத்தின் பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி எப்படியாவது கோவையை நான் திமுக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு முறை நீங்கள் வரும்பொழுது மாற்றுக் கட்சியில் இருந்து பல பெரிய தலைகளை கட்சிக்குள் இழுக்கிறேன் என கூறி வந்தாலும் கொங்கு மண்டலத்தில் இருந்து யாரும் திமுகவில் இணைவதற்கு தயாராக இல்லை என்பதால் செந்தில் பாலாஜியிடம் அதிர்ச்சியில் உள்ளார். 

பலரிடம்செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தியும் 'இல்லண்ணே அது சரிப்பட்டு வராது, திமுகவில் சேர்ந்தால் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் இன்னும் பெரிய அளவில் எல்லாம் நம்மால் கட்சியில் பணியாற்ற முடியாது' என கூறி ஒதுங்கி விட்டார்களாம்.அது மட்டும் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக திமுக சரிவை சந்தித்து வருவது திமுக தலைமையை மேலும் கவலைக்குள்ளாகியுள்ளது. இப்படி பத்தாயிரம் பேரை சேர்ப்பதாக கூறிவிட்டு 4000 பேரை சேர்ப்பதற்கே திணறிய விவகாரம் திமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.