24 special

திருமாவின் குள்ள நரி திட்டம் வெளிவந்தது..! முதல்வர் ஸ்டாலின் டோஸ்.?

thiruma , stalin
thiruma , stalin

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து எப்பொழுது கழன்று செல்லலாம் என திமிறி கொண்டிருக்கிறார், குறிப்பாக திமுக கூட்டணியில் இருப்பது நமது அரசியல் வாழ்க்கைக்கு இப்பொழுதைய சூழலில் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் எனவும் மேலும் 4 ஆண்டுகள் எம்பி பதவியில் இருந்தாகிவிட்டது அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து எம்பி ஆக வேண்டுமென்றால் கண்டிப்பாக அது திமுக கூட்டணியில் இருந்தால் முடியாது காரணம் திமுக கூட்டணியில் வலுவான எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் கிடையாது.


திமுக கூட்டணி ஏற்கனவே கடந்த முறை 39 தொகுதியில் வென்றும் வந்த தொகுதிக்கும் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது எனவே இந்த முறை கண்டிப்பாக மக்கள் மாற்று முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை பொருத்த வரையில் மூழ்கும் கப்பலாக இருக்கும் திமுக கூட்டணியில் இருப்பதில் பயனில்லை என திருமாவளவன் நினைக்கிறாராம் 

மேலும் அதிமுக கூட்டணியிடம் சேர்ந்து விட்டால் குறைந்தபட்சம் 3 எம்பி தொகுதிகள் சீட்டு கேட்டு வாங்க முடியும் அதிலும் சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், அதில் ஒரு தொகுதியில் தான் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எம்பி பதவியில் இருக்க முடியும் என அரசியல் கணக்கை போட்டு திருமாவளவன் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் இருந்து எப்படியாவது கழன்று வந்துவிடலாம் என திட்டமிட்டு பேசிவருவதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.இதன் ஒரு நீட்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருப்பவர்களை பற்றி மறைமுகமாக விமர்சிப்பதும்,  முதல்வர் ஆட்சியில் காவல்துறை செயல்பாடு சரியில்லை என நேரடியாக விமர்சிப்பதும் என திருமாவளவன் செய்து வந்தார்.

இந்த நிலையில் தனியார் யூ டூப் சேனல் ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் தமிழகத்தில் யாரும் தமிழர்களுக்காக போராடிய தலைவர்கள் இல்லை எனவும் கூறினார், அப்போது நெறியாளர் 'வைகோவையும் சேர்த்து சொல்கிறீர்களா?' என கேட்ட பொழுது அதை நான் சொல்ல விரும்பவில்லை எனக்கூறி மழுப்பலாக முடித்துக் கொண்டார். இந்த விவகாரம் மதிமுக தரப்பில் இருந்த அறிக்கை விடுக்கும் அளவிற்கு சென்றது.

மேலும்  திருமாவளவன் வைகோவை தமிழர்களுக்காக உழைத்த தலைவர் இல்லை என கூறியதும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மதிமுக தரப்பில் இருந்து அறிக்கை வந்தவுடன் கூட திருமாவளவன் இது பற்றி எந்த ஒரு மறுப்போ, பதில் அறிக்கையோ விடவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலினின் காதுகளுக்கு சென்றுள்ளது.இதை கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே நாம் ஆட்சி மக்கள் மத்தியில் அதிருப்தியில்தான் உள்ளது.  இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் இப்படி விரிசல் விழுந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அது ஒரு பெரிய ஓட்டையாக மாறிவிடும் என எண்ணி திருமாவளவனை அழைத்து பேசியிருக்கிறார். 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு என்எல்சி விவகாரம் தொடர்பாக திருமாவளவன் முதல்வரை சந்தித்திருக்கிறார், அப்போது முதல்வர் திருமாவளவனிடம் தனியாக பேசியிருக்கிறார், நீங்கள் வைகோவை எதிர்த்து ஏன் பேசினீர்கள் என முதல்வர் கேட்டுள்ளார் அதற்கு திருமாவளவன் இல்லை நான் பேசிய பொழுது வைகோ தரப்பில் இதற்கு வருத்தம் தெரிவித்ததால் நான் உடனே அவரை அழைத்து பேசிவிட்டேன் என கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினோ கூட்டணி கட்சிக்குள் இருந்து கொண்டு நீங்கள் இதுபோல அறிக்கை விடுவது எல்லாம் நன்றாக இருக்காது, இதனை எதிர்க்கட்சிகள் திரித்து விடுவார்கள்! நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது உடனே சென்று நீங்கள் வைகோவை சந்தியுங்கள் என கண்டிப்பாக கூறியதன் விளைவாகவே வைகோவை சென்று சந்தித்துள்ளார் திருமாவளவன் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

இதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திருமாவளவன் நேரில் சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து வைகோவும் திருமாவளவனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, ``இடையில் நேர்காணலில், ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல்போனவுடனே வருந்தத்தக்கவிதத்தில் ஒரு தேவையற்ற, நியாயமற்ற விமர்சனம் உலவ ஆரம்பித்தது.திருமாவளவன் உடனே வருத்தப்பட்டு, `அண்ணனைப் பற்றி நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன்’ என்றார். நான் ஒன்றுமே வருத்தப்படவில்லை. `உங்கள் மேல் எந்த வருத்தமும் கிடையாது’ என்று நான் சொல்லிவிட்டேன்' என்றார் வைகோ. 

அவரைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், ``அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஈழத் தமிழர் குறித்த கருத்துகளை நான் சொல்ல நேர்ந்தது. அதில் அண்ணனின் பெயரைக் குறிப்பிட்டு குதர்க்கமான ஒரு கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு நான் அந்த இடத்தில் விளக்கம் சொல்லாமல் கடந்துபோனேன். அது தவறான புரிதலுக்கு இடம் கொடுத்துவிட்டது' என மன்னிப்பு கூறும் விதமாக கூறினார்.

திருமாவளவன் இப்படி சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக கூட்டணியை விமர்சிப்பது முதல்வர் ஸ்டாலினை ரொம்பவே கோபப்படுத்திய காரணமாகத்தான் திருமாவளவனை முதல்வர் ஸ்டாலின் அழைத்து டோஸ் கொடுத்து இருக்கிறார் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.