தமிழகத்தில் ஸ்டாலின் அமைச்சரவையில் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்த 5 நபர்களுக்கு ஸ்டாலின் முக்கிய துறைகளை ஒதுக்கி இருப்பதாக தெலுங்கு ஊடகம் வெளியிட்ட செய்தி தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்கு பிறகு திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கிறது, இதில் ஸ்டாலினின் முதல் அமைச்சரவை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே பல மூத்த திமுக தலைவர்கள் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்றனர், பழனிவேல் தியாகராஜன் தொடங்கி அன்பில் மகேஷ் என புதியவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.
இந்த சூழலில் தெலுங்கு ஊடகம் ஒன்று ஸ்டாலின் அமைச்சரவை குறித்தும் அதில் 5 அமைச்சர்கள் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற பட்டியல் போட்டுள்ளது, பட்டியலில் கே.என் நேரு, எ.ம.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், காந்தி, சேகர் பாபு என ஐவரின் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளது அந்த ஊடகம்.
இந்த சூழலில் இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரல் செய்யபட்டு வருகிறது, இதில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர், தமிழ் அமைப்புகள் இதற்கு என்ன பதில் அளிக்க போகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது, சரி ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இது போன்று எத்தனை தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர் என்ற கேள்வியும் இணையத்தில் அதிகம் காணப்பட்டு வருகிறது.
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.