Tamilnadu

வேடிக்கை பார்க்கும் தமிழக ஊடகங்கள்? சிறப்பான "சம்பவம்" செய்த ஆங்கில ஊடகம் !

Tamil media
Tamil media

தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை முன்வைத்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பெண்ணின் சாவிற்கு நீதி கேட்டு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன, இந்த சூழலில் தமிழக மக்களுக்காக சேனல் நடத்தும் தமிழக ஊடகங்கள் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் காத்து வருகின்றன.


பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கூட ஜாதி மதம் பார்த்துதான் தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன எனவும், உயிரிழந்த பெண் சாகும் தருவாயில் தன்னை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக குறிப்பிட்ட பிறகும் ஏன் தமிழக ஊடகங்கள் ஒப்பிற்கு கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை அழைத்து விவாதம் நடத்தவில்லை எனவும் எதற்காக இந்த பாரபட்சம் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.

இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் முன்னின்று செய்யவேண்டிய பணியை ஆங்கில ஊடகங்கள் செய்துவருகின்றன, ஆங்கில ஊடகமாக CNN news18, உயிரிழந்த பள்ளி மாணவியின் பெற்றோரிடம் என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, இதன் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

மாணவியின் பெற்றோரிடமே மாணவியை மதம் மாற சொல்லுங்கள் அவளை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் பேசியதாகவும் இதனை பெற்றோர் மறுக்கவே அதன் பிறகே மாணவியை பாத் ரூம் கிளீன் பண்ண சொல்வது, வேலைக்கார பெண்ணை போல் நடத்தியதாக பெற்றோர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஊடகங்கள் முன்னின்று நடத்த வேண்டிய பணியை ஆங்கில ஊடகங்கள் முன்னின்று செய்து இருப்பது தமிழகத்தில் ஊடகங்களின் நம்பிக்கை தன்மையையும் நடு நிலையையும் கேள்விகுறி ஆக்கியுள்ளது, ஆங்கில ஊடகம் வெளிக்கொண்டுவந்த செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.