தமிழக பாஜகவில் இருந்து விலகிய மாநில ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார் உடனடியாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார், பாஜகவில் இருந்து விலகும் முன்பு அறிக்கை வெளியிட்ட நிர்மல் அண்ணாமலையை மறைமுகமாக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்த சூழலில் விமர்சனம் செய்த நிர்மல் குமாரை அண்ணாமலை வாழ்த்தி அனுப்பினார். இது ஒருபுறம் என்றால் கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து விலகிய மறு நொடியே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைத்து கொண்டு இருப்பது கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, மாநில நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்தால் பாஜகவை பலவீன படுத்தலாம் என்றும் மாநில தலைவர் புகழை குறைத்து விடலாம் என நினைத்தால் நாங்களும் அதே போல் செயல்பட்டால் உங்கள் நிலை என்ன ஆகும் என நினைத்து பாருங்கள் என கூறி இருக்கிறார்.
இது ஒருபுறம் என்றால் பாஜகவில் இருந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகளை அதிமுகவிற்கு கொண்டுவர 4 முக்கிய நபர்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமித்து இருக்கிறதாம், இவர்கள் பாஜகவில் இருந்து விலகிய உடன் பாஜக தேசிய தலைமையை விமர்சனம் செய்யாமல் அண்ணாமலையை நேரடியாக விமர்சனம் செய்ய அசைன் மென்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
அண்ணாமலையை எப்படியாவது பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பாக அகற்றிவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் என இருவரும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார்களாம்.
ஆனால் இவர்கள் காய் நகர்த்தல்கள் உள்ளடி வேலைகள் என அனைத்தும் டெல்லிக்கு உடனடியாக ரிப்போர்ட் செல்வதன் மூலம் அண்ணாமலைக்கு உயர்வு தான் கிடைக்கிறதாம், குறிப்பாக சொல்ல போனால் இனி வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமி என்ன அஸ்திரத்தை கையில் எடுத்தாரோ அதே அஸ்திரத்தை பாஜக கையில் எடுக்க இருக்கிறதாம்.
அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் MLA சோழவந்தான் மாணிக்கம், சோழன் சித பழனிசாமி போன்றோர் பாஜகவில் இணையும் முன்னரோ அல்லது பாஜகவில் இணைந்த பின்னரோ அதிமுக மீதோ அதன் தலைவர்கள் மீதோ விமர்சனம் வைக்கவில்லை இப்படி கூட்டணி தர்மத்தை மதிக்கும் பாஜக மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு சித்து விளையாட்டுக்களை அவிழ்த்துவிட்டால் அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க பாஜகவும் தயாராகி வருகிறதாம்.