தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் அரசிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக ஒவ்வொரு சூழ்நிலைகளும் அமைந்து வருகிறது. பல்வேறு ஊழல் மற்றும் கட்சி விவகாரங்கள் பற்றிய ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பொழுது கடும் விமர்சனங்களுக்கு நடுவில் திமுகவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் தமிழகத்தில் எழுந்தது, தொடர்ந்து ஆளுங்கட்சி செய்துவரும் செயல்களை, நடந்துவரும் முறைகேடுகளை ஒவ்வொரு எதிர்க்கட்சியும் முன் வைத்து சில போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலும் முன்னதாகவே நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனர் என்று கூறலாம். அதன்படி திமுக தனது செயல் திட்ட குழு கூட்டத்தில் பல்வேறு களப்பணிகளை முன் வைத்ததோடு தமிழகத்தில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் நகர்வுகள் இனி வரும் காலங்களில் அதிகமாக இருக்கலாம் எனவே ஜாக்கிரதையாக இருங்கள் குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முதல்வர் தனிப்பட்ட முறையில் அழைத்து எச்சரிக்கை விடுத்ததாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.
முதல்வரின் எச்சரிக்கையால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னிடமிருந்து அனைத்து ஆவணங்கள் ஆதாரங்கள் ரசீதுகள் பணப்பரிவுத்தனை விவரங்கள் ஒப்பந்தங்கள் போன்றவற்றை தனக்கு நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் என பலரிடம் கொடுத்து வைத்திருக்கிறார் என்றே கூறப்படுகிறது. இதை தெரிந்துகொண்ட வருமானவரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களை விட்டுவிட்டு அவரின் நெருக்கமான உறவினர் மற்றும் நண்பர்கள் மற்றும் பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் கடந்த 8 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்த அனைத்து ஆதாரங்களையும் தற்போது வருமானவரித்துறையினர் கைப்பற்றி எடுத்துசென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி அமைச்சரின் சகோதரர் அசோக்கின் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட ஐடி அதிகாரிகள் சில கோப்புகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது, மேலும் செந்தில் பாலாஜிக்கு மிக நெருங்கிய நண்பரும் திமுக நிர்வாகியான மைதிலி என்பவரது வீட்டிலும் சோதனையில் ஐடி அதிகாரிகள் ஈடுபட்டு ஆவணங்களை கைப்பற்றினர். இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்ற காரணத்தினாலேயே வருமானவரித்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு மற்றொரு நெருக்கமான நண்பரும் வழக்கறிஞருமான செங்கோட்டையன் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனைகளை மேற்கொண்டு இரண்டு பெட்டி அளவில் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியது செந்திபாலாஜி தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரை அழைத்துக் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கறிஞர் செங்கோட்டையனுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவர் பற்றிய முழு தகவல்களும் தெரிந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது அதனாலேயே அவரை அழைத்து தனிவிசாரணையில் ஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் அவர் கூறப்படும் விவரங்கள் மற்றும் செய்திகள் மூலம் அடுத்த அடுத்த அதிரடி சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இப்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் அலுவல் பணியாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு முதல்வர் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்தும் ஆனால் வருமானவரித்துறையினர் அதையும் தாண்டி செந்தில்பாலாஜிக்கு நெருங்கிய இடங்களில் சல்லடை போட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதும் பேசுபொருளாக மாறியுள்ளது. வருமானவரித்துறையின் அடுத்தகட்ட நகர்வை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.