பிரதமர் மோடி, முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரை கடந்த 2017-ம் ஆண்டு தரக்குறைவாக பேசிய வழக்கில் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர்களை நாஞ்சில் சம்பத் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாகவும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜக சார்பில் பல காவல் நிலையங்களில் 2017-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது , நாஞ்சில் சம்பத் சென்னை அடையாறில் அளித்த பேட்டியின்போது, பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர் உள்ளிட்டோர் குறித்து இழிவாக பேசினார்,
இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர், லோகநாதன், சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியநிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது, இதில் நாஞ்சில் சம்பத் மீது குற்றசாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு எதிராக சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, தொடர்ந்து பல தலைவர்களை அவதூறாக வாழ்க்கை முழுவதும் பேசிவந்த நாஞ்சில் சம்பத் தற்போது சிறை கம்பிகளை எண்ண போகிறார் என்பதே தற்போதைய பேசு பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து ஸ்டான்லி ராஜனும் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :- மோடியினையும் தமிழிசையினையும் மிக அவதூறாக பேசிய வழக்கில் வசமாக சிக்கி இருக்கின்றார் நாஞ்சில் சம்பத் என்கின்றன சில செய்திகள் இப்படி ஒரு வழக்கினை தமிழக பாஜக பதிந்திருக்கின்றது அதன் விசாரணையின் கடைசி விசாரணையின் கடுமையான இறுக்கங்களில் திணறுகின்றது நாஞ்சில் தரப்பு வழக்கு சில வாரங்களில் முடியலாம் , அப்பொழுது முடிவு தெரியும் நாஞ்சில் சம்பத் முன்பு திமுக மேலிடத்தை இதைவிட அதிகம் விமர்சித்திருப்பதால் வழக்கு பற்றி சொல்ல ஒன்றுமில்லை எனினும் மோடிமேல் அவதூறு பரப்பிய வழக்கு இறுதிகட்டத்தை எட்டியிருப்பது பற்றி ஒரு சிறிய சத்தம் கூட வரவில்லை அல்லவா? இதுதான் தமிழக ஊடக தூண்களின் பரிதாப நிலை என குறிப்பிட்டுள்ளார்.