தமிழகத்திற்கு வருகை தந்த பாஜக நால்வர் குழு லாவண்யா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தியது இந்தகுழுவில் இடம்பெற்ற பெண்கள் நால்வரும் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விசாரணை செய்தனர்.
மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா விவகாரம் தொடர்பாக விசாரிக்கத் தனிக்குழு ஒன்றை பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா அமைத்திருந்தார்.
பா.ஜ.க விசாரணைக்குழு தலைவி சந்தியா ராய், நடிகையும் தெலங்கானா முன்னாள் எம்.பி-யுமான விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா, கர்நாடகத்தைச் சேர்ந்த கீதா ஆகியோர் இன்று அரியலூர் வந்து தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான விஜயசாந்தி பேசுகையில், ``மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி புயலை கிளப்பியுள்ளார் விஜயசாந்தி.
யாரைக் காப்பாற்ற முயல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சாகும் தறுவாயில் எந்த குழந்தையும் பொய் சொல்லாது. ஏன் அந்த குழந்தையின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையெல்லாம் விடக்கொடுமை இறந்த பள்ளி குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதுதான். கைது செய்யப்பட்ட சகாயமேரி புகைப்படங்களை ஏன் ஊடகங்கள் வெளியிடவில்லை. மேலும், மற்றவர்கள் மீது ஏன் போலீஸார் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
லாவண்யா தற்கொலை விவகாரத்தை பா.ஜ.க எந்த நிலையிலும் விடப்போவதில்லை. இதை இப்படியே விட்டால் நாளை தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மதமாற்றம் கட்டாயம் நடைபெறும் எனவே கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்.
மேலும் மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இந்த விசாரணை அறிக்கையைத் தமிழக ஆளுநர் மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவிடம் சபர்பிக்க இருக்கிறோம்" என்றார். அதாவது எந்த ஆளுநருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக அதிகார பூர்வ பத்திரிக்கை முரசொலியில் எச்சரிக்கை விடுத்தார்களோ அதே ஆளுநரிடம் பாஜக நால்வர் குழு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே "லாவண்யா" தற்கொலை வழக்கை நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சூழலில் தஞ்சை எஸ்பி உள்ளிட்டோர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை பிற்காலத்தில் உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தற்போது பாஜக நால்வர் குழு ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதால் மேலும் சிக்கலை அரசியல் ரீதியாக ஆளும் தரப்பிற்கு உண்டாக்கியுள்ளது.
More Watch videos