லாவண்யா வழக்கை தமிழக காவல்துறை நடத்தினால் உரிய நடவடிக்கை கிடைக்காது எனவும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் லாவண்யா பெற்றோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் தீர்ப்பில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக நீதிபதி சுட்டி காட்டினார் அது பின்வருமாறு :- வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் மதமாற்றத்தை உத்தரவிடும் பைபிள் பகுதியையும் மேற்கோள் காட்டியது
1, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி: Justice G. R. Swaminathan லாவண்யா குடும்ப வழக்கறிஞர்: அட்வகேட் கார்த்திகேய வேங்கடாசலபதி. அரசு தரப்பு: ஏ.எஸ்.ஜி - செந்தில் குமார். பள்ளி தரப்பு: பாதிரி சேவியர் அருள்ராஜ்.
2, அந்த குழந்தையின் காணொளியும், பெற்றோரின் புகாரும் மதமாற்றம் பற்றி குறிப்பிட்டிருக்கும் போது, "மதமாற்றம் பற்றி ஏதுமில்லை" என்று எஸ்.பி ரவளி பிரியா ஐபிஎஸ் குறிப்பிட்டிருப்பது தேவையில்லாதது. எனவே, அந்த குழந்தையின் தந்தை, "இவர்கள் பாரபட்சமாக இருப்பதால், இவர்கள் விசாரித்தால் நீதி கிடைக்காது" என்று அச்சப்படுவதில் தவறில்லை.
3, தஞ்சாவூர் எஸ்.பி ரவளி பிரியா ஏன் மின் கம்பியை மிதித்தது போல துடித்து, 'மதமாற்றம் பற்றி ஒன்றுமில்லை' என்று சொன்னார் என்பது புரியவில்லை.
4, அந்த பள்ளியை நடத்துவது ஒரு சபை (அன்புமார்க்க Congregation). பைபிள் Matthew 28: 19-20: "ஆகையால், நீங்கள் போய், எல்லா தேசத்தாரையும் சீடராக்குங்கள், பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கடைப்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள்.
பைபிள் Mark 16 : 14-18: யேசு சொல்கிறார், "உலகமெங்கும் சென்று, எல்லா உயிரினங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், ஆனால் விசுவாசிக்காதவன் கண்டனம் செய்யப்படுவான்". இந்த வசனங்கள் தி கிண்டுவில் 30.01.2022 அன்று வெளியாகியிருக்கின்றன. (Sudipta Datta talks about Maria Aurora Couto's "Goa : A Daughter's Story". ).
5, மேலும், அந்த ஊர்ப் பெயரே மைக்கேல்பட்டி என்றாகியிருக்கிறது. அதன் உண்மையான பெயரையும் கண்டுபிடிக்கலாம். எனவே, மதமாற்றம் என்பதை ஒதுக்கிவிட முடியாது. அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். அதை விசாரிக்காமல் எஸ்பி ஒதுக்கியது முறையல்ல. வழக்கை விசாரிக்காமல், அந்த வீடியோ எடுத்தவர் (முத்துவேல்) மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.பி சொன்னது முறையற்றது.வீடியோ எடுத்தது தவறில்லை, அதை மறைக்காமல் சமூகவலைதளங்களில் வெளியிட்டது தவறு.
6, கல்வி அமைச்சரும், கல்வி நிர்வாகமும் மதமாற்றத்தை மறைக்கும் விதத்தில் அறிக்கை விட்டிருப்பது தவறு.
7, இரண்டு வருடங்களுக்கு முன் CHILDLINE பெற்ற புகார் பற்றியும், சித்தி பற்றிய வதந்தியும் பரப்பப்பட்டுள்ளது. அந்த 'லீக்' இந்த விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது (deliberate leaks dent the credibility of the investigation). மாஜிஸ்டிரேட்டுக்கு கொடுத்த குழந்தையின் மரண வாக்குமூலத்தில் சித்தி பற்றி எந்த குறையும் எழுப்பப்படவில்லை.
8, விசாரணையை சீர்குலைக்க காவல்துறை முயற்சிப்பதாக தெரிகிறது. ஒரு உயர் பதவியில் இருக்கும் அமைச்சரே (மதமாற்ற விசாரணைக்கு எதிரான) ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், மாநில காவல்துறை விசாரணையைத் தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறேன் என குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.
நீதிபதி இது போன்ற முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டிய நிலையில் அதது எதையுமே தமிழக முன்னணி ஊடகங்கள் முழுமையாக குறிப்பிடவில்லை மாறாக, லாவண்யா வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்பது பற்றி மட்டுமே தெரிவித்து தீர்ப்பின் முக்கிய அம்சங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் கப் சுப் என தமிழக ஊடகங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More watch videos