
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நவியிடம் கேள்வி கேட்க சென்று அதற்கு அவர் கொடுத்த பதிலடியால் என்ன அடுத்து பேசுவது என தெரியாமல் கேள்வி எழுப்பிய திமுக தலைவர் பாலு அமைதியாக அமர்ந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கு செல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் சென்னையை ஏன் சேர்க்கவில்லை? எத்தனை பயணிகள் செல்கிறார்கள் தெரியுமா? அமைச்சரே உங்கள் இடத்திற்கு வந்து அமர்ந்து இதற்கு பதில் சொல்லுங்கள் என ஆவேசமாக பேசினார் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆர். பாலு மேலும் பேசியவர்
சென்னை விமான நிலையம் ஹஜ் பயண பட்டியலில் நீக்கப்பட்ட காரணத்தால் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபா் தீவுகள், தென் ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோா் கொச்சிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.
இதற்கு பதிலளித்த அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, ‘சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் செல்ல வேண்டும் என்றால் முதலில் அந்நாடு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் முறையாக பின்பற்றியாக வேண்டும்.
இது ஒன்று என்றால் முதலில் சென்னை விமான நிலையத்தையும் ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் விமானநிலையங்களின் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து எங்கள் அமைச்சகத்துக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை இப்போது இங்கு பேசுவதை அமைச்சகத்திடம் முறையிட்டு இருக்கலாம்.
இதுதொடா்பாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசனிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதற்கு அன்றே தகுந்த பதிலளிக்கப்பட்டு விட்டது’ மேலும் கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஹஜ் யாத்திரை மறுஆய்வு கூட்டத்தில் சவூதி அரேபியா நாட்டுக்கான இந்திய தூதா் உள்ளிட்ட வெளியுறவுத் துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனா். அந்தக் கூட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் விமான நிலையங்களாக ஆமதாபாத், பெங்களூரு, குவாஹாட்டி, தில்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, லக்னெள, மும்பை, ஸ்ரீநகா் ஆகியவை தோ்வு செய்யப்பட்டன’ எனவும் பதிலடி கொடுத்தார் அமைச்சர்.
அதாவது எதை எங்கு செய்யவேண்டுமோ அதை தவிர்த்துவிட்டு, நாடாளுமன்றத்தில் அனைத்தும் முடிவு செய்யபட்ட பின்பு பேசி எந்த பயனும் இல்லை என ஒரே போடாக போட்டுவிட்டார் அமைச்சர், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, இதை பார்த்த சிலர் ஒரு வேலை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக ஒன்றிய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம் எழுதிவிட்டதோ என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.