Tamilnadu

போட்டு தாக்கு தாக்கு என "தாக்கிய அண்ணாமலை".. வாட்ஸாப் கால் மொத்தமும் போச்சே..!

Annamalai and stallin
Annamalai and stallin

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலின் உக்ரைன் சென்றுள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு அமைத்துள்ள குழு பற்றிய கேள்விக்கு கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது அதுபின்வருமாறு :-


புரிதல் இல்லாமல் நம்முடைய முதலமைச்சர் எதற்காக இந்திய அளவில் நகைச்சுவைக்கு ஆளாகும் ஒரு மனிதராக ஆகிக் கொண்டிருக்கிறார்? போர் நடக்க கூடிய இரு நாட்டு தலைவர்களிடமும் பேசும் மாண்பு எத்தனை பேரிடம் இருக்கிறது நம் பிரதமர் மோடி ஜியை தவிர?  

ஊடகம்: மாநில அரசு அமைச்சர்களை அனுப்புவது பற்றி... அண்ணாமலை: நாளை அமெரிக்காவில் ஒரு தமிழருக்கு பிரச்சினை என்றால் குழு அனுப்புவீர்களா? ஃபிலிப்பைன்ஸில் ஒரு தமிழருக்கு பிரச்சினை என்றால் குழு அனுப்புவீர்களா? ஜப்பான்ல ஆனால் குழு அனுப்புவீர்களா? இதற்குத் தான் அரசியலமைப்பில் யார் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

வெளியுறவுத் துறை என்பது இந்த மாதிரி மைக்கில் பேசி, வாட்சாப் காலில் பேசி பண்ண முடியாது. Professionals. Hardcore Professionals. நம் வெளியுறவுத் துறை அமைச்சர் (டாக்டர் ஜெய்ஷங்கர்) 40 ஆண்டு காலம் வெளியுறவு துறையில் வேலை செய்தவர். இதெல்லாம் இங்கே ஒரு வாட்சாப் கால் பேசினேன், பில்டப் கொடுத்தேன், டயலாக் பேசினேன் - அப்படியெல்லாம் பண்ண முடியாது.

வெளியுறவுத் துறை என்பது ரொம்ப சூசகமாக நுணுக்கமாக செய்ய வேண்டிய பணி. டவலை போட்டுக்கிட்டு, ஒரு ஸ்டிக்கரை ஒட்டிக்கிட்டு, வர்ற பஸ்ல ஒரு ஃபோட்டோ ஒட்டிக்கிட்டு 'நாங்க காப்பாத்தினோம்' அப்படீங்கறதெல்லாம் வெளியுறவுத் துறை கிடையாது. இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமானம் சி-17 இப்போது (மீட்புப் பணி) ஆப்பரேஷனில்  இருக்கிறது.

தனியார் விமானங்களை அரசு கம்பெல் பண்ணி, உத்தரவிட்டு எல்லாம் அங்கே இருக்கிறார்கள் இப்போது. 4 (மத்திய) அமைச்சர்கள் அங்கே போய் அரசு பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். சும்மா டயலாக் பேசாமல் உள்ளூரில் இருக்கும் பெற்றோர்களில் எத்தனை பேரை இந்த அரசு சென்று சந்தித்தது? அவர்களுக்கு ஆறுதல் சொல்வது தானே இவர்கள் வேலை? இவர்கள் செய்வதெல்லாம் மீடியாவுக்கு செய்தி கொடுப்பதற்காக. இது வரை சி.எம் ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறாரா?

இண்டர்நேஷனல் போலிடிக்ஸ் என்ன தெரியும் உங்களுக்கு? உலகத்தில் போர் நடக்க கூடிய இரு நாட்டு தலைவர்களிடமும் பேசும் மாண்பு எத்தனை பேரிடம் இருக்கிறது நம் பிரதமர் மோடி ஜியை தவிர? புட்டின் அவர்களிடம் நினைத்த நேரத்தில் ஃபோன் எடுத்து பேச எத்தனை தலைவர்களால் முடியும்? 6 மணி நேர விண்டோ வாங்கி கொடுக்க முடியும் (கார்க்கிவ் பகுதியில் இருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற).

டில்லியில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அதிகார பூர்வமாக அறிக்கை கொடுக்கிறது, 'கார்க்கிவில் இருக்கும் இந்திய குழந்தைகளை காப்பது ரஷ்யாவின் கடமை' என்று. வேறெந்த நாட்டு தலைவராவது இம்மாதிரி செய்ய முடியுமா? இதெல்லாம் புரிதல் இல்லாமல் நம்முடைய முதலமைச்சர் எதற்காக இந்திய அளவில் நகைச்சுவைக்கு ஆளாகும் ஒரு மனிதராக ஆகிக் கொண்டிருக்கிறார்? உங்களுக்கு தெரியாத வேலையை செய்யாதீர்கள். ப்ரொஃபஷனல்ஸ்ட்ட, எக்ஸ்பர்ட்ஸ்ட்ட விட்டுடுங்க. 

பாஜக தலைவர்கள் தமிழகத்தில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து விவரத்தை எடுத்து சொல்லும் வேலையை செய்திருப்பதாக அண்ணாமலை தெரிவிக்கிறார் (source -செல்வ நாயகம் )