India

தேசிய + தமிழக ஊடகங்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு..!

National news
National news

நாடு முழுவதும் உறுதி படுத்தாத தகவலை பகிர்வதாக பல்வேறு ஊடகங்கள் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது, மேலும் உக்ரைன் போர் குறித்தும், நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து போலி செய்தியை ஊடகங்கள் பரப்புவதாக குற்றசாட்டு எழுந்துள்ள சூழலில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக அமைச்சகம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதலில்,சில தனியார் சேனல்கள் பரபரப்பு, சர்ச்சை மற்றும் தவறான செய்திகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சில ஊடகவியாளர்களும், ஊடகங்களும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தரும் தகவலை திரித்தும், தவறாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல், அண்மையில் வடமேற்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக சில சேனல்கள் பொறுப்பற்ற முறையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ கிளிப்புகளை வெளியிட்டு ஒரு சமூகத்தை குறிவைத்து மோதலையும் வன்முறையையும் உருவாக்கும் விதமாக செய்திகள் வெளியிடுகின்றன.

 இது ஏற்கதக்கது அல்ல. மேலும் டிவி செய்தி சேனல்களின் விவாதங்களில் அநாகரீகமான ஏற்றுக்கொள்ளாத வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதையும் சேனல்கள் தவிர்க்க வேண்டும்.டிவி சேனல்கள் தற்போது செயல்படும் நிலை குறித்து அரசு தீவிரமான கவலை கொண்டுள்ளது.

எனவே, 1995 சட்ட விதிக்கு மாறாக எந்த செய்தியையும் தகவலையும் டிவி சேனல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சேனல்கள் விவாதங்களில் அநாகரிகமாக போலி தகவல் மற்றும் தரமற்ற முறையில் விவாதம் செய்யும் நபர்களை கொண்டு நடத்துவதால் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மிகவும் அநாகரிகமாக நடைபெற்ற விவாதம் என்றால் செந்தில் நெறியாளராக பங்கேற்ற சசிகலா குறித்த விவாதம்தான் இதில் தேனி கர்ணன் மற்றும் மற்றொரு பங்கேற்பாளர் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசியதால் விவாதத்தை பார்த்து கொண்டு இருந்த பலரும் முகம் சுளிக்கும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.