24 special

பிரிட்டன் தேர்தலை அலங்கரித்த தமிழ் வம்சாவளி பெண்... என்னது இந்த பிரிட்டன் பிரதமரும் இந்திய வம்சாவளி தானா?

PMMODI, UMAKUMARAN,
PMMODI, UMAKUMARAN,

கடந்த ஜூன் நான்காம் தேதி இந்திய நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றது. மேலும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையையும் தேசிய ஜனநாயக கூட்டணி புரிந்துள்ளது. முன்னதாக பிரதம நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடும் பொழுது பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாட்டு தலைவர்கள் மத்தியிலிருந்து பாராட்டுகளும் மீண்டும் பிரதமராவதற்கான வாழ்த்துகளும் வந்த வண்ணம் இருந்தது. இந்திய தேர்தலை அடுத்து பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்தது.


இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டும் போட்டியிட்டது இதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பிரிட்டனின் பிரதமராக இருந்து வந்த ரிஷி சுனக் மற்றும் அவரது கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியானது படுதோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமராக பொறுப்பில் இருந்த ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் பிரிட்டன் பிரதமராக பொறுப்பில் அமர்ந்துள்ளார் என்பது இந்திய நாடு மொத்தத்திற்கு பெரும் பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில் இவரை எதிர்த்து சமீபத்தில் நடந்த பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்ட தொழில் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அதாவது தற்போது பிரிட்டனில் 14 ஆண்டுகள் கழித்து தொழில் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கன்சர்வேட்டிசம் எப்படி இந்த தோல்வியை சந்தித்தது என்று பார்க்கும் பொழுது கொரோனா காலத்தில் ஏற்பட்ட மந்த பொருளாதாரத்தையும் நலிந்த சேதத்தையும் மீண்டும் உயிர்பிக்க முன்னாள் பிரதமர் ரிஷி சுன்னத் தவறியதால் இந்த முறை பிரிட்டன் மக்கள் தொழிலாளர் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஆட்சியை அமைப்பதற்கு 326 இடங்கள் மட்டுமே தேவை இருந்த நிலையில் தொழிலாளர் கட்சிக்கு 400 இடங்களுக்கும் அதிகமான வெற்றி கிடைத்து தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரிட்டனில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள தொழிலாளர் கட்சியின் தலைவரான கெய்ரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மீண்டும் பிரிட்டனின் பிரதமராக ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரே பொறுப்பேற்க உள்ளது செய்திகளின் மிகவும் உற்சாகமாக வெளியிடப்படுகிறது. இது மட்டும் இன்றி இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரனும் வெற்றியடைந்துள்ளார்.

அதாவது பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் எட்டு தமிழர்கள் போட்டியிட்ட நிலையில் தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார் இதன் மூலம் முதல் பெண் தமிழ் எம்பி என்ற பெருமையையும் உமா குமரன் பெறுகிறார். முன்னதாக 1980 இல் இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட பொழுது உமா குமரனின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளது. அப்பொழுது கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் குயின் மேரியில் படித்து பிறகு ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து, தான் வசித்த தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது குடும்பம் பிரிட்டனில் வசித்து வந்துள்ளது மேலும் எங்கள் குடும்பத்தினர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி உள்ளனர் என்று உமாகுமரன் தெரிவித்துள்ளார்.