24 special

யார் இந்த புஸ்ஸி ஆனந்த்...? நடிகர் விஜய்க்கு எப்படி நெருக்கமானார் புஸ்ஸி ஆனந்த்!!!

VIJAY ,PUSSY ANAND
VIJAY ,PUSSY ANAND

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது பிரபல நடிகராகவும் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட ஒருவராகவும் இருந்து வருகிறார். அவரின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இன்று முன்னணி ஹீரோவாக வளர்ந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் விஜய் மற்றும் அவரின் நற்பணி மன்றம் பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது, மாணவர்களுக்கு பரிசு வழங்குவது போன்ற பல உதவிகளை செய்து வந்தது.  இந்த நிலையில் இவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்று அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரையும் வைத்து தொடர்ந்து அதற்காக உறுப்பினர்களையும் ஒரு கட்சிப் பணிகளையும் செய்து வருகிறார்.


ஆனால் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பாகவே விஜயின் மக்கள் இயக்கத்திற்கு புஸ்ஸி ஆனந்த் தான் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே விஜயின் எல்லா கட்டளைகள் மற்றும் அவர் சொல்கின்ற வேலைகள் அனைத்தையும் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் செய்து வந்தது. பெரும்பாலான இடங்களில் விஜய் கூட பார்க்க முடியாமல் அங்கு இவரை தான் பார்க்க முடிந்தது. மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூட விஜய் கலந்து கொள்ளாமல் இவர்தான் கலந்து கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் யார்?? அவர் எப்படி விஜயுடன் இணைந்தார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!! புஸ்ஸி ஆனந்த் கடந்த 2006 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலின் போது புஸ்ஸி என்கின்ற சட்டமன்ற தொகுதியில்  வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வந்ததால்  ஆனந்த் என்ற பெயருக்கு முன்பாக இவர் வெற்றி பெற்ற தொகுதி பெயரான புஸ்ஸி என்பதை சேர்த்து அழைக்கின்றனர்.

முதலில் புதுச்சேரியில் விறகு கடை நடத்தி வந்த இவர் விஜயின் தீவிரமான ரசிகராக இருந்து வந்துள்ளார்.விருது கடை மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்ற தொழில்களையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தனது பகுதியில் விஜய் என்று தனியாக ரசிகர் மன்றத்தையும் அனைத்து மக்களையும் வைத்து பல நல்ல திட்டங்களையும் செய்து வந்து இதன் மூலம் அரசியலிலும் வெற்றி கண்டு உள்ளார். இந்த நிலையில் விஜயின் தந்தையான சந்திரசேகர் உடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பிறகு விஜய் ரசிகர் மன்றத்தின் பெயரில் செய்த நலத்திட்டங்கள் குறித்து அவரிடம் கூறுகையில் விஜயின் தந்தை புஸ்ஸி ஆனந்த்தை விஜய் இடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து விஜய்க்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் விதமாக புஸ்ஸி ஆனந்த் பல செயல்களை செய்து வந்துள்ளார். அதன் பிறகு சில நாட்களில் விஜய்க்கு இவரின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும் விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக விலையில்லா மருந்தகம் போன்ற பல விஜய்க்கு ஆதரவாக செய்து வந்துள்ளார். இவ்வாறு விஜய்க்கு சாதகமாக நிறைய இடங்களில் புஸ்ஸி ஆனந்த் பல செயல்களை செய்து தற்பொழுது நடிகர் விஜய் எடுத்து வைக்கும் அனைத்து செயல்களிலும் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்து வருகிறார். தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட உறவு எப்படிப்பட்டது என்ற செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.