24 special

பெருமாள் கிட்ட விளையாடினா சும்மா விடுமா கர்மா....?

ROJA, JAGANMOHAN REDDY
ROJA, JAGANMOHAN REDDY

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் ஆளுங்கட்சியாகும். இதன் தலைவர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் படுதோல்வி சந்தித்து தற்போது நான்கு மக்களவை இடங்களை மட்டுமே கொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக அமர்ந்தார்.  பிறகு 2010 இல் காங்கிரசை விட்டு வெளியேறி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்று ஒரு கட்சியை நிறுவினார். தேசிய அளவில் ஒரு முக்கிய கட்சியாக வளர ஆரம்பித்த ஒய் எஸ் காங்கிரஸ் 2019 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. 


ஆனால் இந்த ஆட்சியில் மாநிலத்திற்கு சில நலத்திட்டங்களை ஒ எஸ் ஆர் காங்கிரஸ் கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியாக விளங்கிய தெலுங்கு தேசம் கட்சியை தொடர்ந்து சீண்டி வந்தது அதுமட்டுமின்றி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தொடர் குற்றச்சாட்டுகளையும் மோசடி புகார்களையும் முன்வைத்து பல சோதனைகளை மேற்கொண்டதோடு மட்டுமின்றி சந்திரபாபு நாயுடுவை சிறையிலும் அடைத்தது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அரசு! இது ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை எடுத்து இந்த எதிர்ப்புகள் அனைத்துமே 2024 லோக்சபா தேர்தலில் எதிரொளிக்கும் என்று கூறப்பட்டது. அதன்படியே நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸை தோல்வி அடையச் செய்தது.

அதுமட்டுமின்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் 11 எம்எல்ஏக்களில் சிலர் தற்பொழுது தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவ இருப்பதாகவும், ஜெகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தீவிர படுத்தப்பட்ட வருவதால் அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் சிறை செல்ல நேரிடும் எனவே 7 ஆண்டுகள் வரை தேர்தலில் அவரால் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படும் என்று ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அதுமட்டுமின்றி இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக ஒரு தேசிய கட்சியின் ஆதரவை நாடி வருகின்ற ஜெகன் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளராகவும் முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்ற முன்னாள் நடிகையான ரோஜா ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி உள்ளார். இவர் நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாவது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியையும் சந்தித்தார். இதை தவிர ஜெகன்மோகன் ஆட்சியில் ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்கு ரூபாய் 100 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கியதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை எழுந்ததோடு மட்டுமின்றி இந்த புகாரில் ரோஜாவிற்கும் சம்பந்தம் இருக்கும் என்ற வகையில் சிஐடி அதிகாரிகள் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர். 

இந்த நிலையில், திருப்பதி கோவிலின் விஐபி பிரேக் தரிசன முறை கேட்டில் முன்னாள் அமைச்சரான ரோஜாவிற்கு தொடர்பு இருப்பதாக விஜிலென்ஸ் பிரிவு கண்டறிந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் மீது சொத்து குவிப்பு வழக்கு ஒன்று அவரை மூச்சு முட்டும் அளவிற்கு இருக்கிறது இது போதாது என்று ஆடுதாம் ஆந்திரா நிகழ்ச்சியிலும் முறைகேடு தற்போது திருப்பதி விஐபி பிரேக் தரிசனத்திலும் முறைகேடு நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.