கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆளுநர் தமிழிசையை விமர்சனம் செய்த சூழலில் அதற்கு தக்க பதிலடியை நேரடியாக ஆளுநர் தமிழிசை வெங்கடேசனுக்கு புரியும்படி கொடுத்தது அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
தமிழிசை சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தில் திறமை இருப்பவர்களை பயன்படுத்திக்கொள்ள மக்கள் மிஸ் செய்த நிலையில் அவர்களின் திறமையை மதித்து பிரதமர் மோடி ஆளுநராக பணியாற்ற வாய்ப்புகள் கொடுத்து இருப்பதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதில் கொடுத்த வெங்கடேசன், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே.
பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தமிழிசை கொடுத்த பதில் தான் டாப்.. அவரது ட்விட்டர் பக்கத்தில், ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார்....
டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல...அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்...டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் -தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது...
ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்...அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே....நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்...நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்...
இறுமாப்பு வேண்டாம்...ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்...அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை...மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம் என இறங்கி அடித்து இருக்கிறார் ஆளுநர் தமிழிசை.
திமுகவுடன் கூட்டணியில் இல்லை என்றால் தமிழகத்தில் 10 வாக்குகள் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிடைத்து இருக்காது நாடு முழுவதும் கழுதை தேய்ந்து கட்டை எறும்பாக மாறிய கம்யூனிஸ்ட் எம் பி க்கு முறையான வகையில் புரியும் படி கருத்து தெரிவித்த ஆளுநர் தமிழிசையை பலரும் பாராட்டி வருகின்றனர்.