பகாசூரன் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது... இதில் திருமணம் கடந்த புனிதமான உறவு என்று சொல்லவேண்டும் என கள்ளகாதலை கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் இடம்பெற்று இருப்பது நேரடியாக பெரியாரிய ஆதரவாளரான சுப. வீரபாண்டியனை குறிப்பிடும் விதமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
திரவுபதி இயக்குநர் மோகன். ஜி இயக்கியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் இணைந்து நட்டி நடராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்லூரி மாணவிகள் சந்திக்கும் சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் திரைப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தற்பொழுது விருவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை எகிறவைத்த நிலையில் தற்போது பகாசூரன் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.
இதில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் பிரபல நடிகர் ராதாரவி மேடையில் கள்ள காதல் என கூற கூடாது திருமணம் கடந்த புனிதமான உறவு என்று கூறவேண்டும் பேசும் காட்சி இடம்பெற்று உள்ளது, இது முழுக்க முழுக்க சுப. வீரபாண்டியனை மையமாக கொண்டு இயக்க பட்ட காட்சி என ஒரு பக்கம் கிண்டல்கள் அதிகரித்து வர தற்போது சுபவீ ஆதரவாளர்கள்
கடுமையாக மோகனை விமர்சனம் செய்து வருகின்றனர். படத்தை ஓட வைக்க இது போன்ற மலிவான யுத்தியை மோகன் பின்பற்றுவதாகவும் அவரை திராவிட இயக்க தமிழர் பேரவை ஆதரவாளர்கள் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.