Politics

அப்படிப்போடு அறிவாள..."ஒரே ஒரு வார்த்தை"- தட்டி தூக்கிய பாமக பாலு!


வரும் சட்டமன்ற தேர்தலில், யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற  எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியில் என்ன செய்ய போகிறார்கள், என்ன வாக்குறுதி கொடுக்கப்போகிரார்கள்  என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.


அந்த வகையில் ஜெயங்கொண்டம் தொகுதி மக்களுக்கு ஊர்  வித்தியாசமான வாக்குறுதியை கொடுத்து உள்ளார்  பாமக சார்பாக ஜெயங்கொண்டத்தில் போட்டியிடும்  வழக்கறிஞர் பாலு, ஆம்.... தான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என சொல்லிவிட்டு கடைசியில் ஒன்றும் செய்யாமல் மக்களை ஏமாற்றுபவர்கள் பலர் இருக்கையில் வழக்கறிஞர் பாலு மட்டும் தான் ஒரு கிராமத்தையே தத்து எடுப்பதாக அறிவித்து உள்ளார்.

ஆம் தனது தொகுதியான  ஜெயங்கொண்டத்தில் சூறாவளி  பிரச்சாரத்தில் இறங்கி உள்ள பாலு, பொற்பதிந்தநல்லூர் எனும் PP நல்லூர் கிராமத்தில் காடு வெட்டியாரின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேசினார் அப்போது "நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் இந்த கிராமத்தை  தத்தெடுப்பேன்" என்று அறிவித்தார்.

பாமக வேட்பாளர் பாலு வின் வாக்குறுதியை கேட்ட அக்கிராம  மக்கள்  இன்ப அதிர்ச்சியில்  மூழ்கினர்.தொடர்ந்து, வேட்பாளர் பாலுவிற்கு அவ்வூர் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, தாங்கள் வெற்றி மென்மேலும் பல நன்மைகளை செய்திட  எங்கள் ஆதரவு  உங்களுக்கு  என  அங்கேயே அறிவித்தனர்.

இதை எல்லாம் தாண்டி விவசாயிகளுக்கு பக்க பலமாக, களத்தில்  மக்களோடு  மக்களாக நின்று, 8 வழி  சாலை திட்டத்திற்கு தடை  கோரி  உச்சநீதிமன்றம் வரை  சென்று  போராடுபவர் பாலு. சமூகத்தின் மீதுள்ள  அக்கறையால், பல சமூக நல  வழக்குகளை தொடர்ந்து  மக்களின் பக்கம்  நிற்கிறார்.

பொதுவாக மக்கள் மத்தியில் நன்கு படித்த நன்மை செய்ய கூடிய நபர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும்  உண்டு . அந்த  வகையில் பாமக  வேட்பாளர் பாலு  நன்கு  படித்தவர்  மட்டுமல்ல.. திறமையான  உயர்நீதிமன்ற வழக்கறிஞரும்கூட...

எது சரி  எது தவறு என பிரித்தறிந்து, மக்களுக்கு   தேவையான  நன்மைகளை  செய்யக்கூடியவர் பாலு  என அந்த ஊர் மக்களே புரிந்துகொண்டு பேராதரவை கொடுத்து  வருகின்றனர். இதன் மூலம்  ஜெயங்கொண்டம்  தொகுதியில் இவருக்கே  ஜெயம் என்கின்றனர்  விஷயமறிந்தவர்கள்.