Politics

#BREAKING யாருக்கு வெற்றி வெளியானது கடந்த தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த நிறுவனத்தின் முடிவுகள்!! இரண்டு கட்சியும் அதிர்ச்சி!!!

#BREAKING யாருக்கு வெற்றி வெளியானது கடந்த தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த நிறுவனத்தின் முடிவுகள்!! இரண்டு கட்சியும் அதிர்ச்சி!!!
#BREAKING யாருக்கு வெற்றி வெளியானது கடந்த தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த நிறுவனத்தின் முடிவுகள்!! இரண்டு கட்சியும் அதிர்ச்சி!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என அறிய பலரும் ஆவலாக இருப்பார்கள் அதன் காரணமாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் நடைபெறும், அதே சமயம் ஜோதிடர்கள் கிரக நிலையைப் பொறுத்து யாருக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என்பதையும் தங்களின் கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என சிங்கப்பூரை சேர்ந்த ரைட்டேன் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த 24AIRADS நிறுவனத்துடன் சேர்ந்து சர்வே செய்துள்ளது , இந்த நிலையில் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது.

ஜெயலலிதா,கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் திமுக, அதிமுக களமிறங்கக்கூடிய முதல் தேர்தல். அதனால் இரு கட்சிகளுக்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக மு.க ஸ்டாலின் தலைமையில் களமிறங்கி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போது இரண்டு பெரிய கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன, இந்நிலையில் அதிமுக கூட்டணி மொத்தம் -101 இடங்களில் வெற்றி பெரும் எனவும் திமுக கூட்டணி 114 இடங்களில் வெற்றி பெரும் எனவும் -19 இடங்கள் இழு பரியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு சட்டமன்றத்தில் பாஜக, பாமக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என ரைட்டேன் நிறுவனம் தெரிவித்து இருக்கும் கருத்து கணிப்பு திமுக அதிமுக என இரண்டு கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, குறிப்பாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறையும் ஆட்சிக்கு மிக பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரவில்லை என்றால் ஸ்டாலின் முதல்வர் கனவு கனவாகவே முடியும்.