தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு என்று தமிழகத்தை தாண்டி நாடு முழுவதும் பரவலான ரசிகர்கள் உண்டு, தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாக்களை மிஞ்சி நிலைத்து நிற்கும் ஆனால் சமீப காலமாக சில நடிகர்களாலும், புது முக இயக்குனர்களாலும் சில பெரியாரிஸ்ட் சித்தாந்தம் கொண்ட நபர்களாலும் தமிழ் சினிமா அதல பாதளத்திற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெரும் என பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் ரசிகர்களுக்கு படம் மிகவும் மோசமாக இருப்பதாக வரும் தகவல்கள் பெருத்த வேதனையை கொடுத்துள்ளன, அதே நேரத்தில் கன்னட மொழி படமான KGF 2 திரைப்படம் தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் வெளியான தெலுங்கு திரைப்படம் RRR உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது, இந்த திரைப்படங்கள் வெற்றி அடையவும் தமிழ் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம் கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடா திரை துறையை சேர்ந்த நடிகர்கள் எந்த கடவுளையும் இழிவாக விமர்சனம் செய்வது இல்லை, மேலும் இந்து கலாசாரத்தை தூக்கி பிடிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் சில இயக்குனர்கள் பெரியாரிஷம், கம்யூனிசம் என பேசி பேசி தமிழ் சினிமாவை குட்டி சுவராக மாற்றிவிட்டனர், ஷங்கர் என்ற ஒற்றை இயக்குனர் இந்திய அளவில் தமிழ் சினிமாவை கொண்டி சென்றார் ஆனால் அவரையும் சில பத்திரிகையாளர் ஜீவா போன்ற அரைவேக்காடுகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் KGF 2 படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த தமிழ் சினிமா ரசிகர் ஒருவர் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், தமிழ் சினிமா என்ன **யா புடுங்கிக்கிறார்கள் என ஆவேசமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், இன்னமும் அந்த சாதி காரன் என்னை அடிமையாக வைத்து இருந்தான் என தமிழ் சினிமாவில் படம் வெளியானால் சாதி ரீதியாக தமிழர்கள் மட்டும்தான் பாதிப்படைவார்கள்.
தமிழ் சினிமா என்றும் முன்னே செல்லாது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் தமிழ் சினிமாவை உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அதில் கம்யூனிசம், பெரியாரிஷம் என ஏதாவது ஒரு கருத்து இடம்பெற்றாலும் படம் தோல்வியை தழுவும் என்றே கூறப்படுகிறது.
தமிழர்கள் இந்தியாவை ஆளவேண்டும் என்றால் முதலில் இந்திய சினிமாவில் வெற்றியை தொடவேண்டும், அவன் என்னை 50 வருடம் முன்பு அடித்தான் குத்தினான் என படம் எடுத்தால் அரசியல் ரீதியாக வெற்றியை பெறலாமே தவிர பெரிய வெற்றியை பெறமுடியாது.
தமிழ் சினிமா குறித்து திரைப்படத்தை பார்த்துவிட்ட சென்ற நபரின் கருத்து (0.54) இணைக்கப்பட்டுள்ளது.