24 special

ஆட்சி அவ்வளவுதான்.. கோட்டையில் காட்டு தீயாக பரவிய செய்தி...! கோபாலபுரத்தில் என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை..

mkstalin
mkstalin

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 5000 பக்கம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்வரின் பெயரும்கூட இருப்பதாகத் தகவல் உள்ளது. யாருக்குத் தெரியும், தமிழகத்தின் கேஜ்ரிவால் வெளிவரலாம்.”  என பாஜகவின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளது அறிவாலய அஸ்திவாரத்தை ஆட்டி படைத்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அமலாக்க துறை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில்,  அடுத்தடுத்து விசாரணையை தொடங்கி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வேலையில் இறங்கியது  அமலாக்கதுறை. 


மேலும் தற்போது தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வழக்கு என்றால் டாஸ்மாக் வழக்கு தான். அமலாக்க துறை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில்  டாஸ்மாக் நிறுவனம் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு சாதகமாகசென்று கொண்டிருக்கையில்,  உடனே உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு, இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து ஒரு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனமும் தமிழக அரசும்,  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். 

இதற்கிடையே அமலாக்கத் துறை தரப்பில், “டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உள்ளது.என தெரிவித்தது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. திமுக பலமாக உள்ளது என்ற பிம்பம் உடைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சர்கள்,அமித்ஷா, பிரதமர் ஆகியோரின் தமிழகம் வருகை  அதிமுக பாஜக கூட்டணி திமுகவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் தமிழகத்தில் 2026 தேசிய ஜனநாயக கூட்டணி தான் அமையும் என்பதில் உறுதியாக உள்ளார் அமித்ஷா.

இது ஆளும் தரப்புக்கு கிலியை கிளப்பியுள்ளது. முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் யாருக்கு தேதி கொடுக்கிறாரோ இல்லையோ ஜாமீன் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டால் எத்தகைய நெருக்கடியான சூழலாக இருந்தாலும், செந்தில்பாலாஜி கேட்ட தேதியை கொடுத்து விடுவார் துணை முதல்வர். இந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி நடத்தும் விழாவிற்கு கோவை செல்கிறார் உதய் . செந்தில் பாலாஜிக்கு துணை முதல்வருக்கும் இவ்வளவு நெருக்கம் குறித்து விசாரிக்க ஆரம்பித்துளார்கள் டெல்லி சிறப்பு குழு. மேலும் கோபாலபுர குடும்பம் மீது விரைவில் ரெய்டு பணிகளை முடுக்கிவிட தயாராகி உள்ளார்கள். அடுத்த கெஜ்ரிவால் தான் தமிழக முதல்வர் என கூற  ஆரம்பித்துள்ளது கோபாலபுர குடும்ப தலையில் இடியை இறக்கியுளது. 

ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கில் ஆட்சியை இழந்துள்ளார் கெஜ்ரிவால் மேலும் தெலுங்கானா சந்திரசேர்ராவ் அரசும் மதுபான ஊழலில் தான் கவிழ்ந்தது. ஜெகன் மோகன் ரெட்டி கவிழந்ததும் ஊழல் தான். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மீது, சட்டவிரோத வருமானம் சம்பந்தமான வழக்கு ஏற்கெனவே அமலாக்கத்துறையால் தொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது அவரும் டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்ததாக கூறப்படும் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

 இந்த விவகாரத்தில் முக்கியமான ஒன்றாக, டால்மியா சிமென்ட்ஸ் நிறுவனம், ஜெகனுக்கு சொந்தமான ரகுராம் சிமென்ட் நிறுவனத்தில் ரூ.95 கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கத் துறை சார்ந்த குத்தகை உரிமை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த நிலமே முடக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நடவடிக்கையால் ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களிலும் தொழில் துறையிலும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.