Politics

நீதிமன்றம் போட்ட போடு... எப்போது செந்தில்பாலாஜி கைது தேதி குறித்த அமலாக்கத்துறை.. உச்சநீதிமன்றத்தில் வசமாக சிக்கிய ஆதாரம்..

senthilbalaji
senthilbalaji

டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை மார்ச் தொடக்கத்தில் அதிரடியாக சோதனை நடத்தியது. அதன் முடிவில், டாஸ்மாக் விவகாரத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.


ஏற்கனவே பணமோசடி வழக்கில் ஜாமினில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா மற்றும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்று கேட்டுத் தெரிவிக்கக் கூறியிருந்தோம். ஆனால், அதனை முழுமையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம். காலம் தாழ்த்துவது சரியான நடைமுறை இல்லை. நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என்பதை சாதகமாக எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து வருகிறீர்கள்” என்று கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், “10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். கூடுதலாக எந்த கால அவகாசமும் வழங்கப்படாது” என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பொறுத்து வழக்கின் அடுத்தக் கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. ஆனால் 10 நாட்கள் ஆகியும் தற்போது வரை  செந்தில் பாலாஜி தரப்பில் எந்த விளக்கமும் இருந்து தரப்படாததால் செந்தில் பாலாஜியின் ஜாமீனை விரைவில் ரத்து செய்யப்படும் என தக்வல்கள் வெளியாகி உள்ளது.  இந்த தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே  டாஸ்மாக் வழக்கும் மேற்கொண்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இது குறித்து  நீதிபதிகள் ஊழலுக்கு எதிராக அமலாக்க துறையினர் பல ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளார்கள்.  . அப்படி இருக்கையில் இதை விசாரிக்க கூடாது,  சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவிப்பது,  தமிழக அரசு துறையில் ஊழல் நடந்தால் விசாரிக்கவே கூடாது என்று எண்ணுகிறதா.?  என கேள்வி எழுப்பியுள்ளார்கள் நீதிபதிகள். மேலும் வரும் ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிக்குள் தமிழக அரசு தரப்பில் அமலாக்கத்துறை எதிராக என்ன விளக்கம் கொடுக்க வேண்டுமோ அல்லது வாதம் செய்ய வேண்டுமோ செய்து விட வேண்டும்.

இதற்கு பின்பு அமலாக்க துறையினர் இந்த வழக்கை சுதந்திரமாக விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள் நீதிபதிகள். இந்த நிலையில் இந்த டாஸ்மாக் தொடர்பான சோதனையை அமலாக்கத் துறை விசாரணை நடத்த விடாமல் காலதாமதம் செய்வது எப்படி என்று  திமுக போட்ட திட்டம் தகடு பொடி ஆகும் வகையில் இந்த வழக்கு  அமலாக்கத்துறைக்கு சாதகமாக மாறி உள்ளது.தமிழக அரசு டாஸ்மாக் விவகாரத்தை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இது உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் அமலாக்கத்துறைக்கு எளிதாக்கிவிடும். 

மேலும்  அமலாக்கத்துறையினர் ஏற்கனவே யார் யாருக்கு சம்மன்  அனுப்பி, உடனே யார் யாரை கைது செய்ய வேண்டும் என்று பட்டியலை தயார் செய்து வைத்த நிலையில்,  சமீபத்தில் அமலாக்கத் துறையினர்  சோதனை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக அரசு நீதிமன்றத்தை நாடியது, மேலும் அமலாக்க துறையை கோபப்படுத்தியதாகவும் அந்த வகையில், ஏப்ரல் இறுதிக்குள் செந்தில் பாலாஜியை கைது செய்து திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமலாக்கத்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது