
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து தமிழகத்தின் அண்டை நாடான இலங்கையில் தரை இறங்கிய பிரதமர் மோடிக்கு உளவுத்துறை மூலம் முக்கிய தகவல் கொடுக்கப்பட்டு இருப்பதும் அதன் அடிப்படையில் தமிழக அரசியல் களத்தில் என்ன நடக்க போகிறது என்ற தகவலும் தற்போது வெளிவந்து இருக்கிறது,.
அண்ணாமலை நேற்றைய தினம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது எளிதில் சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும்படி வக்பூ விஷயத்தை மையமாக கொண்டு விளக்கம் கொடுத்தார் அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நான் தலைவர் போட்டியில் இல்லை என கூறினார் முக்கிய திருப்பமாக இதை தமிழக ஊடகங்கள் தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை பேச தொடங்கினர் ஆனால் இதன் முழுமையான பேச்சின் சாராம்சத்தை பலரும் புரிந்து கொள்ளவில்லை.
நான் தலைவர் போட்டியில் இல்லை என்று சொன்னவர் அடுத்து ஒரு விஷயத்தை கூறினார் பாஜகவில் 50 பேர் போட்டி போடுவது எல்லாம் கிடையாது தலைவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் அந்த வகையில் தான் நான் தலைவர் பொறுப்பில் போட்டியில் இல்லை என தெரிவித்தேன் என விளக்கி இருக்கிறார். இதை பலரும் அறிந்துகொள்ளவில்லை இந்த சூழலில் தான் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அண்ணாமலை பேசிய விஷயம் தமிழகத்தில் உள்ள முக்கிய உளவுத்துறை அதிகாரி மூலம் பிரதமர் அலுவலகம் கவனத்திற்கு சென்றது அப்போது அண்ணாமலை பேசிய முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி தற்போது இலங்கையில் இருப்பதாலும் அடுத்து அவர் இராமேஸ்வரம் வர இருப்பதாலும் தமிழகத்தில் யார் யாரை எல்லாம் பிரதமரை சந்திக்க இருக்கிறார்கள் என்ற நேரம் பைனல் செய்யப்பட்டு இருக்கிறது அப்போது அண்ணாமலை விஷயம் பிரதமர் கவனத்திற்கு சென்று இருக்கிறது அதில் அண்ணாமலை பேசிய பேச்சுக்களை தமிழக ஊடகங்கள் தெளிவாக திசை திருப்புகின்றனர், அண்ணாமலை நான் தலைவர் பதவி போட்டியில் இல்லை பாஜகவில் யாரும் போட்டி போட மாட்டார்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார்கள் அந்த வகையில் தான் நான் போட்டியில் இல்லை என கூறினேன்.
இதில் அண்ணாமலை பேசிய முதல் வார்த்தையை மட்டுமே ஊடகங்கள் முன்னிலை படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அத்துடன் அண்ணாமலையை மாற்றினால் ஏற்கனவே தெலுங்கானாவில் எது போன்ற பின்னடைவை பாஜக சந்தித்ததோ அதே போன்ற ஒரு பின்னடைவு தமிழகத்தில் இருக்கும் எனவும் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் இராமேஸ்வரம் சென்று பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார் பின்னர் மதுரையில் தங்குகிறார், பிரதமர் மோடியை அவர் நாளை சந்திக்க இருக்கிறார் அப்போது தனது தரப்பு விஷயங்களை அண்ணாமலை பிரதமரிடம் நேரடியாக விளக்கம் கொடுக்கிறார்.
பிரதமர் மோடிக்கு அண்ணாமலை மீது தனிப்பட்ட வகையில் கட்சியை நேர்மையாக வளர்ப்பவர் சமரசம் இல்லாமல் கட்சியின் பணிகளை செய்பவர் என்ற மதிப்பு இருக்கிறதாம் அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசியல் களத்தை அண்ணாமலையை மையமாக கொண்டே முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கை பிரதமர் மோடிக்கு இருப்பதால் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் தொடர்வது நிச்சயம் என்கின்றனர் விவரம் அறிந்த வட்டாரங்கள்.