மக்கள் மத்தியில் திமுகவிற்கு பெரும் பின்னடைவுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியான விவகாரத்தை கூறலாம். அவர் நிதி அமைச்சராக இருந்த பொழுது முதல்வரின் மகன் மற்றும் மருமகனை பற்றியும் திமுகவை பற்றியும் பேசி இருந்த ஆடியோக்கள் இரண்டு பாகங்களாக வெளியானது அதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று வதந்திகள் பரவப்பட்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் நடைபெற்றது அந்த மாற்றத்தில் தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜர் நிதி அமைச்சர் பதவியில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
இதற்கிடையில் அந்த ஆடியோ பதிவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதில் உள்ள குரல் என்னுடையது அல்ல மாஃபிங் செய்யப்பட்டுள்ளது என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வரை நேரில் சந்தித்து கூறிவிட்டு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அவரது பதவி மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு அவர் திமுகவின் எந்த ஒரு விழாக்களிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வருமானவரித்துறை சோதனை நடத்தி அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் முற்படும் சமயத்திலும் சரி, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது திமுகவின் மொத்த அமைச்சரவையே மருத்துவமனையில் குடியிருந்த பொழுதும் சரி பி டி ஆர் சென்று செந்தில்பாலாஜியை நேரில் பார்க்கவில்லை, இவ்வளவு ஏன் பி.டி.ஆர் தரப்பிலிருந்து தரப்பிலிருந்து ஒரு சம்பிரதாய ட்வீட் கூட செய்யாமல் இருந்தார். மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக பல மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகள் திமுக தலைமையில் நடைபெற்று வருகிறது அதிலும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரை காண முடியவில்லை என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.
மேலும் அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விசாரணை மேற்கொண்ட பொழுதும் பி டி ஆர் தரப்பிலிருந்து என்ன ஏது என்று கூட கேட்கப்படவில்லை, அதோடு திமுக தலைமையும் பி டி ஆர் ஐ கண்டு கொள்ளவில்லையே என்றே தெரிகிறது.
இந்த நிலையில் திமுக ஏற்பாடு செய்த கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதாவது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக பல திட்டங்களை தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த குழுவுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக மூன்று நாட்கள் பயணமாக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அதோடு அந்த நிகழ்வில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனுமான கேடி ராமராவை நேரில் சந்தித்து தகவல் தொழில்நுட்பத் துறை பற்றி சிலவற்றையும், அதன் கொள்கை மற்றும் உத்திகள் பற்றி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தின் சில மாவட்டங்களில் சில புதிய ஐடி துறை சார்ந்த மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் பி டி ஆர் தரப்பில் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அழைப்புகள் செல்வதில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படி ஆளுங்கட்சியின் அமைச்சராக இருந்தும், மூன்று தலைமுறைகள் அரசியல் பரம்பரையிலிருந்தும் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே பி டி ஆர் இருந்து வருகிறார் என அவரது ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர்.