தற்போது திமுக முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அல்லது சட்ட வழக்குகளிலும் சிக்கி வருகின்றனர். அதில் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை புழல் சிறை வரை சென்றுள்ளார். அடுத்து அமைச்சர் பொன்முடியும் இடம்பெறுவார் என்று கூறப்படுகின்ற வகையில் அமலாக்கத் துறையின் சோதனை அதற்கடுத்த விசாரணை விவகாரங்களை வைத்து தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அமலாக்க துறையின் லிஸ்டில் இடம்பெற உள்ளார், அதாவது கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. வழக்கில் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கியது. இந்த நிலையில் தற்போது அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அமலாக்கத்துறை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற சூழ்நிலையில் இதன் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி. இப்படி திமுகவின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் சட்ட பிரச்சனைகளில் சிக்கி வருகின்ற நிலையில் புதிய வரவாக திமுக எம்.பி ஒருவரின் கொலை வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது என தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி ஆர் வி எஸ் ரமேஷ் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவருக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி கோவிந்தராசை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸ் இந்த கொலை வழக்கில் சிக்கிய கடலூர் எம்பி ரமேஷ் மற்றும் மற்ற ஐந்து நபர்களுக்கு எதிராக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று இறந்த கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி இந்த மனு மீதான விசாரணையின் முடிவு நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்பி விசாரணை நீதிமன்ற அமைந்துள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்த வழக்கை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார் ஆனால் எம்பி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் விழுப்புரம் மாவட்டத்தில் இதனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இந்த வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் மேலும் ஆறு மாதத்திற்குள் இது தொடர்பான விசாரணையை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிகள் சிக்கி வரும் நிலையில் கடலூர் எம் பி டி ஆர் வி எஸ் ரமேஷ் கொலை வழக்கும் கிளைமாக்ஸ்சை எட்டி வருவது திமுக தரப்பை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக தரப்பு வழக்கறிஞர்கள் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.