Politics

முதல்வர் கவனத்திற்கு சென்ற விஷயம். .... முதல் முறை தமிழகத்தில் வந்த மெகா மாற்றம் என்ன நடக்கிறது!

mkstalin
mkstalin

தமிழகத்தில் ஒரு கட்சி மற்றும் கூட்டணி எல்லாம் அமைவதற்கு சித்தாந்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அந்த வகையில் தமிழகத்தில் இடது சாரிகள் இன்று வரை மக்கள் செல்வாக்கை பெறவில்லை என்றாலும் ஆட்சியிலும் தேர்தலிலும் வெற்றி பெற அவர்களின் அமைப்புகள் முன்பு வலுவாக இருந்ததே காரணம் இந்த நிலையில் தான் தற்போது முக்கிய மாற்றம் ஒன்று தமிழகத்தில் மெல்ல அரங்கேறி இருக்கிறது. 


தமிழகத்தில் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் சென்னையில் லிட் பெஸ்ட் என்ற நிகழ்ச்சி நடக்கிறது இந்த நிகழ்ச்சி குறித்த பின்னணி திராவிட மற்றும் இடது சாரிய கருத்து கொண்ட நபர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.  இது நாள் வரை கலை இலக்கிய திருவிழா என்ற பெயரில் இந்தியாவின் கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களை இடது சாரிய அமைப்புகள் செய்து வந்தன அதற்கு வலதுசாரிய ஆதரவாளர்கள் இடையே முறையான திட்டமிடல் இல்லாமல் இருந்தது இந்த நிலையில் தான் இண்டாய் அனாலிட்டிககிஸ் என்ற நிறுவனம் மற்றும் பரத் கோபு முயற்சியால் கலை மற்றும் இலக்கியம் சார்ந்து கலாச்சாரத்தை மையமாக கொண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். 

இந்த நிகழ்ச்சி மிக பெரிய அளவில் ஆளும் திமுக மற்றும் அதன் கொள்கைக்கு எதிராக இருக்கும் என்ற காரணத்தால் நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்வதில் இருந்து அனுமதி கொடுப்பது என பல்வேறு வகைகளில் இடையூறுகள் வந்த வண்ணம் இருந்தன இறுதியாக தற்போது நிகழ்ச்சி தேதி குறிக்கப்பட்டு வருகின்ற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சி நடக்கிறது இந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக paytm நிறுவனர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

இந்த நிகழ்வில் தேசிய சிந்தனை கொண்ட நிகழ்வுகள் அதிகம் இருக்கும் என்பதாலும் நிகழ்ச்சி வெற்றி பெற கூடாது என ஆளும் திமுக தரப்பும் இதுநாள் வரை கலை இலக்கியம் என்ற போர்வையில் மக்களை மூளை சலவை செய்து வந்த இடது சாரிய அமைப்புகளும் கடுமையான  உள்ளடி வேலைகளை செய்து வருகிறதாம் இவை அனைத்தையும் தாண்டி தேசிய சிந்தனை கொண்ட நபர்கள் அதிக அளவில் இணைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள பலரும் இப்போதே இந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் செல்ல இருப்பதாக கூறப்படும் தகவலால் அடுத்த தலைமுறை நம்மைவிட்டு சென்று விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் ஆளும் தரப்பு.  

வழக்கமாக சென்னையில் சித்தாந்த ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம் முதல்வரின் நேரடி கவனத்திற்கு செல்வது வழக்கமான நடைமுறை இருப்பினும் நாட்டின் முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் என்ன நடக்கிறது என முழுமையான விளக்கம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்று இருக்கிறதாம்,  வரும் நாட்களில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும் என பலரும் இப்போதே வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.