24 special

வீடியோவில் வசமாக சிக்கிய வைகோ...சபையில் முன்னே எழுந்து அமிட்ஷா சொன்ன வார்த்தை கதி கலங்கி நின்ற திமுக எம் பி கள்!

amitsha .vaiko
amitsha .vaiko

வக்ஃப் வாரியம் அமைப்பில், அதன் சட்டத்தில் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்த புதிய சட்ட திருத்ததிற்கு ஆதரவு பெருகியுள்ளது இதுகுறித்து பலதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் இஸ்லாமிய சட்டத்தில் ஆழமாக வேரூன்றியது வக்ஃப் அமைப்பு. ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு கீழ் என்று உரிமை கோரப்பட்டால்.. அந்த சொத்தை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அந்த சொத்து அதன்பின் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே நிரந்தரமாக இருக்கும்.


வக்ஃப் வாரியம் நிலங்களை கையகப்படுத்துவதும் விதம் அதை நிர்வகிக்கும் விதம் வெளிப்படை தன்மை இல்லாதது.இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான சொத்துக்கள் வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளன. தனியார் நிலம் முதல் பிரதான நகர்ப்புற ரியல் எஸ்டேட் வரை பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முறையான ஆவணங்கள் அல்லது சரிபார்ப்பு இல்லாமல் வக்ஃப்  வாரிய சொத்து என பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் தனிப்பட்ட சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமலோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ வக்ஃப் ஆக பதிவு செய்யப்பட்டதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதன் காரணமாக மக்கள் பலர் தங்களின் நிலங்களை மீட்க வேண்டி சட்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. பலர் இப்படி தங்களின் நிலங்களை மீட்க.. பல வருடங்களாக சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் நிலங்களை வக்ஃப் வாரியம் முறைகேடாக கைப்பற்றியதாக புகார்கள்வந்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில் தான் வக்ஃப் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா மீது பாஜக, காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் மசோதா மீது உரையாற்றினர். சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. அப்போது வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 95 எம்பிக்கள் வாக்களித்தனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் இருந்ததால் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இதற்கிடையே வக்ஃப் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழில் பேசினார் அதற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி பேசும் போது, வக்பு சொத்து இஸ்லாமியர்கள்  நிலைப்பாடு குறித்தும் பதிலடி தந்தார் இதை பொறுத்து கொள்ள முடியாத தமிழ்நாடு எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்த்து குரல் எழுப்பினர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.அப்போது எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் ஆட்சேபம் தெரிவித்து ஆவேசமாக பேசினார்.

சுதன்சு திரிவேதி, உபி எம்பி:- வக்ஃபு சட்டம் இஸ்லாமியர்களுக்கு நல்லது, கெட்டது இலலை திரு. வைகோ என கூறினார் - அத எப்படி நீ சொல்லுவ?அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா:- பாருங்க வைகோவுக்கு நல்லா ஹிந்தி புரியுது தெரியுது என கூறியதும் வைகோ முதல் திமுக எம்.பிகல் கப்சிப் ஆனார்கள் திமுகவின் இந்தி எதிர்ப்பு சாயம் வெளுக்கிறது என சமூக ஊடகங்களில் வெளுத்துதிமுகவை வெளுத்து வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்