24 special

அப்போ மேட்டரு கன்பார்ம்தான் ...!புழல் சிறையில் கேட்கும் கதறல் சத்தம்...!

Senthilbalaji
Senthilbalaji

காவிரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்டார்ஜ் ஆக வேண்டிய நிலையில் ஏன் இப்படி ஏசியில் வைத்து அவரை பாதுகாத்து வருகிறீர்கள் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிய அடுத்த இரு தினங்களில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. புழல் சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பாகவே காவேரி மருத்துவமனை அவரது உடல் நிலையை முழுவதுமாக பரிசோதனை செய்தது, பிறகு புழல் சிறையில் உள்ள மருத்துவர்களும் ஒரு மணி நேரமாக அவரை பரிசோதித்து எந்த விதமான உணவுகள் கொடுக்க வேண்டுமென பட்டியலிட்டன தற்போது அவர் புழல் சிறையில் தினமும் செய்தித்தாள்கள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


அதாவது அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்டவிரதற்கான பரிமாற்ற வழக்கின் கீழ் மாலை வேளையில் கைது செய்யப்பட்டு புழலில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதி என்பதால் அவருக்கு கூடுதல் வசதிகள் சிறையில் செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக அவர் இதய அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் ஏழு நாட்களுக்கு சிறையில் உள்ள மருத்துவர்களின் கண்காணிப்பினும் மேற்பார்வையிலும் இருப்பார் என்றும், இவரது அறைக்கு அருகிலேயே விசாரணை கைதிக்கான இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் செந்தில் பாலாஜியிடம் கொடுக்கப்பட்ட இரண்டு பொறுப்புகளை திரும்ப பெறப்பட்டாலும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதால் முதல் வகுப்பு சிறை அவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும் 001440 என்ற கைதி என்னும் அவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

முதல் வகுப்பறை என்றால் கட்டில், மெத்தை, தலையணை, தொலைக்காட்சி பெட்டி, நாற்காலி, மேஜை, நவீன கழிப்பறை இதனுடன் நல்ல காற்றத்துடன் கூடிய சூழ்நிலையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறையில் உள்ள மருத்துவர்கள் அவரை கண்காணிப்பதால் வெளியில் இருந்த அவருக்கு எந்தவிதமான உணவுகளும் வழங்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அதனால் சிறையிலேயே அவருக்கு உணவுகள் சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. காலையில் சிறப்பு உணவாக வெண்பொங்கல் உப்புமா மற்றும் கஞ்சி வழங்கப்படுகிறது. இதிலும் அவர் இட்லி தோசை வேண்டும் என்று கேட்டால் அதுவும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். 

பிறகு மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு அல்லது பொறியல்கள் தரப்படுகிறது அது வேண்டாம் என்றால் சிறை உணவகத்தில் வழங்கப்படும் உணவை வாங்கி உண்டு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் போதாது என்று முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறப்புகளின் சிறப்பு உணவாக வாரத்தில் மூன்று நாட்கள் கோழி கறி குழம்பு சாப்பாடு வழங்கப்படுவதாகவும் அவர் அசைவம் வேண்டாம் என்று கூறினால் சாம்பார், சாதம், பொரியல், கூட்டு, நெய் மற்றும் ஒரு வாழைப்பழம் அசைவத்திற்கு பதிலாக கொடுக்கப்படும் என்றும் சிறை துறை வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி தினமும் காலையில் செய்தித்தாள்களை படித்து வருவதால் வெளிவட்டாரங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர் முழுமையாக தெரிந்து கொள்வதாகவும் மேலும் அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட ரெய்டு மற்றும் அவர் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்கிறார். இதுவும் கூட அமைச்சர் செந்தில்பாலாஜியை அச்சப்படுத்தியதாக செய்திகள் கசிந்துள்ளன.

அமைச்சர் பொன்முடி வேற தற்போது மாட்டிக்கொண்டு விட்டாரே என்ற செய்தி வேறு செந்தில் பாலாஜிக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் அமைச்சர் பொன்முடி விசாரணை மற்றும் ரெய்டு பற்றிய தகவல்களையும், அடுத்து என்ன நடவடிக்கை என்ற தகவலையும் அவ்வப்போது கேட்டு தெரிந்துகொள்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி என தகவல்கள் தெரிவிக்கின்றன..