புதிய நாடாளுமன்ற திறப்பு விழா சமயத்தின் போது மல்யுத்த வீராங்கனைகள் போராடியது பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கும் அளவிற்கு பேசுபொருளாக மாறியது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பி ஆக இருக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக், வினேஷ்போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா போன்ற கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போதும் இவர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாகவும் கூறினர் அதனை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்து பிறகு விடுவித்தனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தவர்கள் இவர்களை இப்படி தெருவில் இறங்க வைத்து போராட வைப்பது நியாயமா என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்து வருகிறது மேலும் மத்தியில் ஆளும் பாஜக மீது கடுமையாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு காங்கிரஸ் பெரிதும் ஆதரவளித்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அரசியல் பேசி வருகிறது. மல்யுத்த வீராங்கனைகள் அளித்த குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய அரசு 5 போ் கொண்ட குழுவை அமைத்தது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றிய சம்பவமும் செய்திகளில் வெளியானது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்டதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷா'விடம் கேட்டுக் கொண்டு அவரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மல்யுத்த வீரர்களின் இந்த வலியுறுத்தலுக்கு அமைச்சர் அமித்ஷா பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் அதில் எந்த ஒரு பாரபட்சமும் காட்டப்படாது சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான தான் இருக்கும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்று பதில் அளித்துள்ளார் என அமைச்சரை சந்தித்த மல்யுத்த வீரர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இப்படி திடீரென இரவு 11 மணி அளவில் அமைச்சர் அமித் ஷா வை சந்தித்து வந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவித்தார். அதாவது சாக்ஷி மாலிக் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் அரசியல் காரணங்களுக்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதனை அமித்ஷா தெரிந்துகொண்டு இது போன்ற அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து விலக வேண்டும் என அமித் ஷா கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது இதே மாதிரி தான் அமைச்சர் அமித்ஷா அன்று அய்யாக்கண்ணுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிறகு அய்யாக்கண்ணு தனது போராட்டத்தை கைவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்பொழுது மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில் இருந்து சாக்ஷி மாலிக் போராட்டத்தில் இருந்து நான் விலகவில்லை எனவும் போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே இவர் தரப்பில் இருந்துதான் போராட்டத்தில் இருந்து விலகுகிறேன் என செய்திகள் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.இப்படி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆடி கார் விவசாயி அய்யாக்கண்ணு நடத்திய போராட்டம் போன்று மாறி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்