விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி மூலம் தற்போது வசமாக பின் விளைவுகளை சந்தித்து வருகிறார். விசிகவினரே அண்ணன் பேசியது சரியாக இல்லை என கருத்து சொல்லும் அளவிற்கு வந்து இருக்கிறது திருமாவளவன் நிலை.
தனியார் ஊடகம் நேர்காணலில் பங்கேற்ற திருமாவளவனிடம் செங்கோல் வைப்பதை ஏன் எதிர்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு நேரடியாக ஒரு மதம் சார்ந்த நிகழ்வு என்பதால் எதிர்க்கிறோம் என திருமாவளவன் குறிப்பிட்டர், மேலும் மாடாதிபதிகளை கொண்டு சென்று மோடி தன்னை இந்து ராஷ்டிரா என அடையாள படுத்துகிறார் எனவும் திருமாவளவன் கூறினார்.
அங்கு தான் நேர்காணல் செய்த பெண், ஏன் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் அனைத்து மத முறைப்படிதான் பூஜை நடத்தினார்கள் என கேட்க பதிலுக்கு திருமா எப்போ நடந்தது என கேட்டார். இங்கு தான் திருமா வசமாக சிக்கி இருக்கிறார். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் என்ன நடந்தது என கூட தெரியாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறாரே என திருமாவளவனை வெளுத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
இது ஒருபுறம்என்றால் அடுத்த கேள்வியில் திருமா சிக்கியது தான் ஹைலைட், மோடி செங்கோல் வைத்தது தவறு என்றால் சென்னை மேயர் பதவி ஏற்பு விழாவின் போதுதான் கையில் செங்கோல் கொடுக்கப்படுகிறது அதை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என நெறியாளர் திருமாவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு திருமாவோ சென்னை மேயர் பதவி ஏற்பில் கொடுக்கப்படுகிற செங்கோல் என்பது வெறும் சடங்கு என்று கூறினார்.
அப்போ மோடி செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதும் சடங்கு தானே சார் என நேர்காணல் செய்தவர் கேட்க என்ன செய்வது என முழித்தார் திருமா? மேயர் செங்கோல் மூலம் திருமா பதில் சொல்ல முடியாமல் உரிய காரணத்தை கூறாமல் நேர்காணலில் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அண்ணே நேர்காணல் போகும்போது தரவுகளுடன் போங்க அண்ணே என சிறுத்தைகளும் இப்போது முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர்.