தமிழ் செய்தி ஊடகங்கள் ஆளும் கட்சியான திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திவரும் நிலையில் அது உண்மை என நிரூபிக்கும் வகையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது .
சில வாரங்களுக்கு முன்னர் news7 tamil எனும் ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பற்றிய 200 நாள் ஆட்சி குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் பலர் ஆட்சி மிக மோசம் என பதிலளித்திருந்தனர். அதில் மிரண்டு போன நிறுவனம் அந்த செய்தியை உடனடியாக நீக்கி தனது திமுக ஆதரவு நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டது.
அதே போல புதியதலைமுறை செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் மாறான முடிவுகள் வந்த பின்னர் அந்த பதிவை நீக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சத்தியம் டிவி எனும் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று கருத்துக்கணிப்பை நடத்தி இருந்தது தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர் யார் என கேள்வியெழுப்பியிருந்தது.
அதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பெயர் இருந்த போதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை இதையடுத்து அந்த கேள்வியின் கமெண்ட் செக்ஸ்னில் பலர் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் பெயரை பதிவிட்டனர்.
மேலும் மேலும் அவரது பெயர் மட்டுமே பின்னூட்டத்தில் பதிவிடப்பட்டு வருகையில் தனது திமுக ஆதரவை நிலைநிறுத்த வேண்டி அந்த பதிவையே நீக்கி நடுநிலை தவறி திமுக ஆதரவு தொலைக்காட்சி என்கிற முத்திரையை வாங்கிக்கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி எதற்கு வம்பு என்று பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்று அண்ணாமலை அதிக வாக்குகள் பெற்ற நிலையில், வாட்ஸப் மூலம் அனுப்புங்கள் என்று அண்ணாமலை பெயரை இருட்டடிப்பு செய்ய முயன்றதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் பாஜக மற்றும் அண்ணாமலை செயல்பாடுகளால் ஆன்லைன் மூலம் வாக்கு பதிவு செய்யும் பல ஊடகங்கள், ஆன்லைன் ஊடகங்கள் அண்ணாமலை பெயரை கண்டாலே கதறி கொண்டு பதிவை நீக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.