பாஜக சார்பில் மதுரையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நலத்திட்ட விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்ட ராதாரவி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார். தற்போது பாஜகவில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அடுத்து 80 எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்றும் இதை தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்வோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார் ஆனால் இப்போது அவரை அருகில் வைத்துள்ளார் என்றும் விமர்சனம் செய்தார்.
மாநில அரசு மத்திய அரசை நோக்கி கையேந்தவேண்டியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசிய நிலையில் மத்திய அரசிடம் மாநில அரசு கையேந்தும் நிலைதான் எப்போதும் இருக்கிறது புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என ராதா ரவி கேட்டார்.
பிரதமர் கடந்த முறை வந்தபோது கோ பேக் மோடி என கொடி பறக்கவிட்டவர்கள், தற்போது ஜனவரி 12ம் தேதி பிரதமர் வரும்போது கொடி பறக்க விடுவார்களா எனவும் ராதா ரவி கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வருகின்ற ஜனவரி 12-ம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12-ம் தேதி விமானம் மூலம் சென்னை வர இருக்கிறார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.