
தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சனம் செய்பவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றசாட்டு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் மிக முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறி அதில் பாஜகவினர் செயல்பட்ட விதமும் ஆளும் அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது போல் மாநில அரசும் பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது, இதில் அக்கட்சியை சேர்ந்த பல்வேறு அணிகளும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 30 ம் தேதி பாஜக சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டத்தில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் OBC மாநில துணை தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். இது குறித்து அவர் பேசியபோது திமுக தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள் ஆனால் குறைக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார்.
இறுதியாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது பெட்ரோல் விலையை மாநில அரசு குறைக்கும் வரை ஓய போவது இல்லை, தற்கொலை படை தாக்குதல் நடத்தவும் தயார் என தெரிவித்தார், இதையடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் திமுக மற்றும் இன்னும் பிற அமைப்புகள் புகார் அளித்தனர்.
இதனால் இதுகுறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது... இதையடுத்து, தனிப்படை போலீசார் அகோரத்தை கைது செய்ய சுமார் 500 ம் மேற்பட்ட போலீசாரை குவித்து கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். பிறகு சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் அகோரம் ஆஜர்படுத்தப்பட்டார், இந்த தகவல் பாஜகவினருக்கு தெரியவர காவல்நிலையம் முன்பு குவிந்தனர்.
உடனடியாக கைது செய்யப்பட்ட அகோரத்தை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த தகவல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரியவர உடனடியாக அகோரத்தை பெயிலில் எடுக்கும் நடவடிக்கையை எடுக்க அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவிற்கு உத்தவிட்டார்.
இதையடுத்து வழக்கறிஞர் பிரிவு முறையாக வேலை செய்து அகோரத்தை பெயிலில் கொண்டுவந்துள்ளது, அகோரம் பேசியது போன்று திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பேசிய வீடியோ ஆதாரங்களை கையில் வைத்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் இல்லை என்றால் நீதிமன்றம் மூலமும் மத்திய அரசு மூலமும் நாங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம் என காவல்துறையிடம் தெரிவிக்க உடனடியாக அகோரத்திற்கு பெயில் கிடைத்துள்ளது.
மேலும் இது போன்ற கைது படலங்கள் ஆளும் அரசாங்கம் மூலம் நடைபெறாமல் இருக்க பாஜக மாநில தலைமை மாவட்ட வாரியாக வரிசையாக குழுக்களை அமைத்து ஆளும் கட்சியினர் வன்முறையை தூண்டும் விதமாக பேசும் பேச்சுக்களை சேகரிக்க முடிவு செய்துள்ளதாம் இதன் மூலம் காவல்துறையினர் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழலில் அதே போன்ற சட்ட நடவடிக்கையை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் எடுக்க வேண்டும் என அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்க முடிவு எடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் தமிழக பாஜக.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.