தமிழகத்தில் பா.ஜ.க தினம் தினம் திமுக தலைமைக்கு ட்விஸ்ட் கொடுத்து கொண்டே இருக்கிறதாம் குறிப்பாக எதையெல்லாம் பாஜக செய்யாது என நினைத்தார்களோ அவை அனைத்தையும் தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜக, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அமைச்சர் அத்துமீறி உள்ளே நுழைந்து நீரை திறந்துவிட்ட நிலையில் மாநில கட்சிகள் அமைதியாக இருந்தன.
ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சியான பாஜக களத்தில் இறங்கி கேரள ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டையும், அதற்கு துணை நின்றதாக திமுகவின் செயல்பாட்டையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இது திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், அடுத்த கட்டமாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி போராட்டத்தை தொடங்கியது தமிழக பாஜக, இது மாநில கட்சியான திமுகவிற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.
பொதுவாக மத்தியில் ஆளும் அரசுதான் பெட்ரோல் டீசல் மீது வரி வருவாய் தொகையை நிர்ணயம் செய்து பணத்தை சாம்பாத்தியம் செய்கிறது என்பது மாநில கட்சிகள் முன் வைக்கும் வாதம் ஆனால் தமிழக பாஜக திமுக அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், மாநில அரசான திமுக அரசும் கணிசமான தொகையை பெட்ரோல் டீசல் வரிகளின் மூலம் பெறுகிறது என்பது பொதுமக்களுக்குதெரியவந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க எப்படி எட்டுவழி சாலை அமைக்கவிடமாட்டோம் என திமுக போராட்டம் நடத்தியதோ அதே போல, பாஜகவும் விவசாய நிலங்களை அளிக்காதே என்ற பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளது, குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை "விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள்! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட தமிழக பாஜக விடாது எனவும், "ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத் திட்டத்தையும் செயல்படுத்தாத திமுக விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.
ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும் 3832 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சி அங்கு வாழும் 10,000 மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க நில புரோக்கார்களும், ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் முயன்று வருகிறது. இந்த முயற்சியின் பின்னால் இருப்பது எந்த குடும்பமாக இருந்தாலும் அதனுடைய உறுப்பினர்களாக இருந்தாலும் விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட பாஜக விடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "விவசாய நிலங்களில் அமையவுள்ள TIDCO தொழிற்பேட்டையை எதிர்த்துப் போராடி வரும் அன்னூர் பகுதி குன்னிபாளையம், அக்கரை செங்கபள்ளி, வாக்கானாம் கொம்பு, ஆத்திகுட்டை, குழியூர் விவசாயிகளை அவர்களின் இல்லம் தேடிச் சென்று சந்தித்தேன். பல ஏக்கர் விவசாய நிலங்களுடன் குடி இருக்கும் வீட்டையும் இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் தவித்து வரும் விவசாயிகள் நடத்திவரும் இந்த அறப்போராட்டத்திற்குத் தமிழக பாஜக ஆதரவைத் தெரிவித்தோம்.
அவினாசி அத்திக்கடவு திட்டம் மூலமாக மேலும் பயனடையவுள்ள இந்த பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கவிருக்கும் தமிழக அரசின் இந்த முயற்சியைத் தடுக்க அனைத்து போராட்டங்களையும் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துச் செல்லும் என உறுதி அளித்துள்ளோம். விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிடவேண்டும். விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் பாஜக எந்த விஷயத்தில் எல்லாம் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று ஈடுபடாது என திமுக அரசு நினைத்ததோ அதில் அனைத்திலும் இறங்கி ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக களத்தில் இறங்கி போராடி வருகிறது பாஜக, இவை அனைத்தையும் தாண்டி அடுத்து வரும் நாட்களில் மிக பெரிய சம்பவம் ஒன்றை கையில் எடுத்து தொடர் போராட்டம் பாஜக தரப்பில் நடத்தப்படலாம் எனவும் அது ஆளும் கட்சிக்கு மிக பெரிய பின்னடைவை கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.