நீட் தேர்வு எனும் ஒரு விஷயத்தை வைத்தே திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனிதா என்ற மாணவியின் மரணம் மூலம் அதனை பெரிதுப்படுத்தி அரசியல் செய்தது திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை கொடுத்தது திமுக.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மக்களை நம்பவைத்தார். இந்த சூழலில் நீட் தேர்வு மிகவும் பயனுள்ளது எனவும் ஏழை மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான வர பிரசாதம் நீட் தேர்வு என விளக்கம் கொடுத்தது பாஜக இந்த சூழலில் சமீபத்தில் கூட தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வு ரத்து மசோதா குறித்து சந்தேகங்களை எழுப்பி இருந்தார்.
நிலைமை இப்படி இருக்க தற்போது நீட் தேர்வு மூலம் சாக்கடை அள்ளும் கூலி தொழிலாளி பிள்ளை மருத்துவம் படிக்க தேர்வாகி இருப்பது தெரியவந்துள்ளது, இதனை மாணவரின் தந்தை பதிவு செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நீட் தேர்வு ஏழை எளிய மக்களுக்கு எதிரான தேர்வு என சில ஊடகங்கள் உதவியுடன் திமுக ஊதி ஊதி பெரிதாக்கிய நிலையில் அவை அனைத்தையும் சுக்கு நூறாக உடைக்கும் விதமாக சாக்கடை அள்ளும் தொழிலாளி பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
ஊடகங்கள் உதவியுடன் பல ஆண்டுகளாக நீட் தேர்விற்கு எதிராக திமுக கட்டமைத்த பொய் பிம்பம் இதன் மூலம் சுக்கு நூறாக உடைந்து இருப்பதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர், நீட் தேர்விற்கு பிறகே ஏழை மக்களின் பிள்ளைகள் அதிக அளவில் மருத்துவம் பயில்வது உறுதியாகி இருக்கிறது.
வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது